ரஜினி உடன் நடிக்க சான்ஸ்.. பெங்களூரு பெண்ணிடம் பெரிய மோசடி
ரஜினிகாந்த் இந்தியாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என எல்லோருக்கும் தெரியும். அவருடன் நடிக்க வேண்டும் என பாலிவுட் நட்சத்திரங்கள் கூட பலரும் விரும்புவார்கள்.
ரஜினி தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். அதே நேரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

பெண் புகார்
பெங்களூரை சேர்ந்த மிருதுளா என்ற பெண் தன்னிடம் ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இரண்டு பேர் மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்து இருக்கிறார். ரஜினி 171 பட வாய்ப்பு என சொல்லி சமூக வலைதளங்களில் வந்த போஸ்டரை பார்த்து அணுகியபோது இரண்டுபேர் பேசி இருக்கின்றனர்.
வாய்ப்பு தருவதாக 4 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றி இருக்கின்றனர். போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன் பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் பற்றி சில வருடங்கள் முன்பு லீகல் நோட்டீஸ் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
