CWC புகழ் எப்போதும் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார்... விமர்சனங்களுக்கு அவரது மனைவி பதிலடி
குக் வித் கோமாளி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
முதல் சீசன் ஆரம்பித்த நாள் முதல் 6 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது, நிகழ்ச்சியில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.
சமீபத்தில் 6வது சீசன் மிகவும் கலகலப்பாக குக் வித் கோமாளி ஷோ ஈஸ் பேக் என்ற அளவிற்கு கலாட்டாவின் உச்சமாக ஒளிபரப்பானது.
ஆனால் கடைசியில் ஒரு சோகமான விஷயம் நடந்துவிட்டது, என்னது 6வது சீசன் முடிவுக்கு வந்துவிட்டது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகழ் மனைவி
குக் வித் கோமாளி கடைசி எபிசோடில், புகழின் மனைவி பென்ஸி தனது மகளுடன் கலந்துகொண்டார். அப்போது பேசும்போது அவர், எனது கணவர் புகழ் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு தான் அதிகம் வருகிறது.
ஷோவை ஷோவாக பார்க்க வேண்டும், இதில் பிரச்சனை என்பது யாருக்கு என்றால் எனக்கும் அந்த பெண்ணுக்கும் தான். எனது கணவர் பற்றி எனக்கு தெரியும், தவறான நோக்கத்துடன் பழகும் எந்த ஒரு அணிடமும் ஒரு பெண் பழக மாட்டாள்.
அப்படி இருக்கும் போது முதல் சீசன் முதல் இப்போது வரை அனைத்து பெண்களும் இவருடன் நட்பாக உள்ளார்கள், இதை வைத்து பார்த்தால் ஒரு ஆணின் குணம் எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.