இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான சிறந்த பாடல்கள்..
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக அசைக்கமுடியாத இடத்தை பிடித்திருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இசையில் வெளிவந்த பல பாடல்கள் இன்றும் அனைவருடைய மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அப்படி, நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த பாடல்கள் குறித்து பார்க்கவிருக்கும் கட்டுரை தான் இந்த தொகுப்பு
புது வெள்ளை மழை
மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ரோஜா. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் முத்திரை பதித்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக புது வெள்ளை மழை பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த பாடலை உன்னி மேனன் மற்றும் சுஜாதா இருவரும் இணைந்து பாடியிருந்தார்கள்.
ரோஜா ரோஜா
1999ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காதலர் தினம். இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் போட்ட ஒவ்வொரு பாடலும் மெகாஹிட்டானது. அதில் குறிப்பாக ரோஜா ரோஜா பாடல் இளைஞர்களை மிகவும் கவர்ந்தது. அப்போது காதலர்களால் பெரிதும் கேட்டகப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்றாகும். இப்பாடலை, உன்னி கிருஷ்ணன் பாடியுள்ளார்.
பூங்காற்றிலே
மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் உயிரே. இப்படத்திற்கு தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளுக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் இன்றும் பலருடைய காலர் டோனாக ஒலித்துக்கொண்டிருந்தது. அப்படி ரசிகர்களுக்கு இப்படத்திலிருந்து கவர்ந்த பாடல்களில் ஒன்று 'பூங்காற்றிலே'. இந்த பாடலை சுவர்ணலதா மற்றும் உன்னி மேனன் இருவரும் இணைந்து பாடியுள்ளார்கள்.
என் காதலே என் காதலே
எஸ்.பி.பி மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற பாடல்களில் ஒன்றாகும் என் காதலே என காதலே. டூயட் எனும் தமிழ் படத்தில் இடம்போற்றிருந்த இப்பாடலை இன்றும் கேட்கும் பொழுது பலருக்கும் கண்ணீர் வரும். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களில் ஒன்று என் காதலே என் காதலே.
முன்பே வா என் அன்பே வா
கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா ஜோதிகா ஒன்றாக நடித்து வெளிவந்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும், காதல் ஜோடிகளின் Favorite. அதிலும் குறிப்பாக ஸ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் ஐயர் குரலில் வெளிவந்த முன்பே வா என் அன்பே வா பாடல் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
என்ன சொல்ல போகிறாய்
ராஜிவ் மேனன் இயக்கத்தில் அஜித், ஐஸ்வர்யா ராய், மம்மூட்டி, தபு நடித்து வெளிவந்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று என்ன சொல்ல போகிறாய். இந்த பாடலை ஷங்கர் மகாதேவன் தனது இனிமையான குரலில் மிகவும் அழகாக பாடியிருந்தார்.
சிநேகிதனே சிநேகிதனே
மணி ரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் அலைபாயுதே. இப்படத்தின் வெற்றிக்கு ஒரு மிகமுக்கியமான காரணம் ஏ.ஆர். ரஹ்மானின் இசை என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக ஸ்ரீனிவாஸ், சாதனா சர்கம் இருவரும் இணைந்து பாடிய சிநேகிதனே சிநேகிதனே படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றது.