தமிழில் வெளிவந்த சிறந்த அனிமேஷன் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ
தமிழில் வெளிவந்த சிறந்த அனிமேஷன் திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
கோச்சடையான் - 2014
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் கோச்சடையான். அவதார் படத்தை போலவே photorealistic motion capture technology-யை பயன்படுத்தி இப்படத்தை உருவாக்கியிருந்தனர். இப்படத்தில் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். மேலும் அவருடன் இணைந்து தீபிகா படுகோன், நாசர், ஆதி, சரத்குமார், ஜாக்கி ஷராப் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இனிமே நாங்கதான் - 2007
வெங்கி பாபு இயக்கத்தில் தமிழில் வெளிவந்த சிறந்த அனிமேஷன் படங்களில் ஒன்றாகும் இனிமே நாங்கதான். இப்படத்தில் வந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு எம்.எஸ். பாஸ்கர், பாண்டு, வாசு விக்ரம், லல்லு சபா மாறன் ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர்.
குண்டான் சட்டி - 2023
குண்டான் சட்டி என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அனிமேஷன் குழந்தைகள் திரைப்படமாகும். இப்படத்தை பி. கே. அகஸ்தி இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ராமாயணா தி எபிக் - 2010
சரித்திர கதைகளில் ஒன்று ராமாயணம். இதை வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதே போல் இயக்குநர் சேட்டன் தேசாய் என்பவரின் இயக்கத்தில் உருவாகி 2010ம் ஆண்டு வெளிவந்த படம் ராமாயணா தி எபிக்.