இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான சிறந்த பாடல்கள் - ஒரு பார்வை
இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானாக உருவெடுத்துள்ளார். இளையராஜா, ரகுமான், யுவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் வரிசையில் இணைந்துள்ளார். உலகமெங்கும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள அனிருத், அவர் தொட்ட திரைப்படங்கள் எல்லாம் ஹிட் என சொல்லும் அளவிற்கு அவரின் இசை தமிழ் திரைப்படங்களுக்கு முக்கியமாகி இருக்கிறது.
அதன்படி வரிசையாக பீஸ்ட், டான், விக்ரம் என அனிருத் தான் அப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். அப்படியான உச்ச இசையமைப்பாளராக ஜோலித்து கொண்டு இருக்கும் அனிருத் இசையில் பட்டிதொட்டி ஏங்கும் ஹிட்டான பாடல்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.
வை திஸ் கொலவெறி கொலவெறி
தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 3, இப்படத்தின் முலம் அனிருத் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தனது முதல் திரைப்படத்திலே இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார். அந்த வகையில் அப்படத்தில் இருந்து முதல் பாடலாக தனுஷ் எழுதி பாடிய வை திஸ் கொலவெறி கொலவெறி பாடல் வெளியானது. வித்தியமான அந்த பாடல் உலகளவில் வரவேற்பை பெற்று யூடியூப்-ல் அதுவரை எந்த ஒரு பாடலும் செய்யாத சாதனையை படைத்தது.
எதிர்நீச்சல் அடி
சிவகார்த்திகேயன் நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் எதிர்நீச்சல், அனிருத் இசையில் இரண்டாவது திரைப்படமான இப்படத்தின் பாடல்கள் வெளியான முதலே செம பெரிய ஹிட். குறிப்பாக வாலி எழுத்தில் இப்படத்தில் அமைந்த எதிர்நீச்சல் அடி பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஹானி சிங் தங்களின் ராப் முலம் ரசிகர்களை கவர்ந்தனர்.
வேலையில்லா பட்டதாரி
தனுஷ் நடிப்பில் இயக்குநர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற முக்கிய காரணமே அனிருத் தான். அல்பமே ஹிட் ஆன இப்படத்தில் வேலையில்லா பட்டதாரி டைட்டில் ட்ராக் முக்கிய அமசம். அப்போது இளைஞர்கள் அனைவரும் வேலையில்லா பட்டதாரி டைட்டில் ட்ராக்-யை தான் ரிங் டோன்-ஆக வைத்துக்கொண்டு சுற்றிவந்தனர்.
செல்பி புள்ள
தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. முதல்முறையாக மிக மாஸ் ஹீரோவுக்கு இசையமைத்த அனிருத், தனது மாஸ்ஸான இசையின் முலம் தெறிக்கவிட்டு இருந்தார். குறிப்பாக விஜய்யை வைத்து அவர் இசையில் பாட வைத்திருந்த செல்பி புள்ள பாடல் அந்தாண்டின் பிளாக் பஸ்டர் பாடலாக அமைந்தது.
டானு டானு டானு
DnA காம்போவில் முன்றாவது முறையாக வெளியானது மாரி திரைப்படம், இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற முக்கிய காரணம் அனிருத் இசை. ட்ரைலரில் இருந்தே அனிருத் இசை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து செம ஹிட்டான பாடலாக அப்படத்தில் இருந்து டானு டானு டானு அமைந்தது.
ஆலுமா டோலுமா
அஜித் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேதாளம், அனிருத் தனது மாஸ்ஸான BGM முலம் படம் முழுக்க தெறிக்கவிட்டு இருப்பார். குறிப்பாக அப்படத்தில் இருந்து வெளியான ஆலுமா டோலுமா பாடல் செம வரவேற்பை பெற்றது. எந்தளவிற்கு என்றால் இன்றும் கூட ஆலுமா டோலுமா பாடல் ஒளிக்காத திருமணங்கள் இல்லை. அந்த அளவு இப்பாடலுக்கு மாஸ்.
மரண மாஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனிருத் BGM-ல் நடந்து வந்த இப்படத்தின் அறிவிப்பு வீடியோவே பிளாக் பஸ்டர் வெற்றி தான். மேலும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி அல்பமே வெற்றி பாடல்களை ரசிகர்களுக்கு அளித்திருந்தார் அனிருத். மேலும் இப்படத்தில் இருந்து ரஜினியின் மாஸ்ஸான நடனத்துடன் வெளியான மரண மாஸ் பாடல் தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
அரபிக் குத்து
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்போதும் போல இந்த கூட்டணி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. மேலும் அரபிக் குத்து பாடல் உலகளவில் பேமஸ் ஆனது, கோலிவுட் முதல் பாலிவுட் வரை அப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு சென்சேஷன் ஏற்படுத்தினர்.