தமிழ் சினிமாவில் குழந்தைகளை வைத்து வெளிவந்த சிறந்த படங்கள்- ஓர் பார்வை
நமது நாட்டின் வருங்காலமே குழந்தைகள் தான். தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துள்ளது.
சில கலகலவென இருக்கும், ஒருசில குழந்தைகள் சம்பந்தப்பட்ட படங்கள் கண்ணீரையே வர வைத்துவிடும். சரி இதுவரை தமிழ் சினிமாவில் வெளியாகி இருந்த குழந்தைகளை மையப்படுத்திய சிறந்த படங்களின் தொகுப்பை காணலாம்.
பசங்க (2009)
பாண்டிராஜ் இயக்கத்தில் எதார்த்தமான கதைக்களத்தில் பசங்களை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.
பள்ளியில் இரு அணி அவர்களுக்கு நடக்கும் போட்டி, இதை வைத்து பள்ளி மாணவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் செய்ய கூடாது என்பதை அழகாக காட்டியிருப்பார்.
இப்படத்திற்கு தேசிய விருது, மாநில விருது, பிலிம்பேர், விஜய் அவார்ட்ஸ் என நிறைய விருதுகள் கிடைத்துள்ளது.
சைவம் (2014)
ஏ.எல். விஜய் இயக்கத்தில் நாசர், சாரா அர்ஜுன், பாட்ஷா, த்வாரா தேசை, வித்யா பிரதீப் என பலர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். கிராமத்தில் குழந்தைகளுடன் இருக்கும் குடும்பத்தை சுற்றிய கதை. தனது கோழி மீது பாசமாக இருக்கும் சின்ன பெண்ணை சுற்றியே பாதி கதை செல்லும்.
இந்த படத்தில் சிறந்த பாடல் பாடிய உன்னி கிருஷ்ணன் மகள் உத்ராவிற்கு தேசிய விருது கிடைத்தது, மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கும் விருது கிடைத்தது.
காக்கா முட்டை (2015)
மணிகண்டன் இயக்க தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து தயாரிக்க விருதுகளை அள்ளிய திரைப்படம். ஏழ்மை குடும்பத்தின் பிறந்த இருவர் பீட்சா வாங்குவதற்காக பணம் சேர்த்து வைக்க, ஒருநாள் பீட்சா உரிமையாளரால் தாக்கப்படுகின்றனர்.
தங்களது கனவை நினைவாக்க போராடும் குழந்தைகளை பற்றி கதை கூறும். மிகவும் எதார்த்தமான கதைக்களத்தில் அமைந்த இப்படம் விருதுகள் லிஸ்ட் போடும் அளவிற்கு ஏகப்பட்ட விருதுகளை அள்ளியுள்ளது.
மெரினா (2012)
பசங்க பட வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கிய படம் மெரினா. படிக்காமல் பணிபுரியும் குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்றும் குடும்பம் பற்றிய பாசத்தையும் கதை உணர்த்தும். காமெடி கலந்து கருத்துள்ள படமாக இப்படம் உள்ளது.
இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகி அசத்தி இருப்பார் சிவகார்த்திகேயன்.
அஞ்சலி (1990)
மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியாகி இருந்த ஒரு தரமான திரைப்படம். குழந்தைகளை மையமாக கொண்டு உருவான படங்கள் என்றாலே முதலில் அஞ்சலி திரைப்படம் அனைவருக்கும் நியாபகம் வந்துவிடும்.
அந்த அளவிற்கு மக்களுக்கு நெருக்கமான ஒரு திரைப்படம் இது. மனநலம் சரியில்லாத குழந்தை பற்றியும், அவர்களை போன்றவர்களை எப்போதும் தனியாக விடக் கூடாது என்பதை உணர்த்துகிறது.
இதில் ஷாலினியின் தங்கை ஷாமிலி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார், அவருடன் நிறைய குழந்தைகளும் நடித்துள்ளார்கள், படத்திற்கு தேசிய விருதுகள் 3 கிடைத்துள்ளது.
பிரபல சீரியல் நாயகியை காதலிக்கும் பாரதி கண்ணம்மா தொடர் நாயகன் அருண்- எந்த நடிகை தெரியுமா?