தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி நடிகைகள்- இவர்கள் கின்னஸ் சாதனை எல்லாம் செய்தவர்களா....
தமிழ் சினிமா காலத்திற்கு ஏற்ப வளர்ந்துகொண்டே வருகிறது. ஹாலிவுட் மேடை வரை இப்போது தமிழ் சினிமா படங்கள் அதிகம் கவனிக்கப்படுகின்றன.
இதில் எல்லா விதமான படங்களும் அடங்கியுள்ளன, காதல், ஆக்ஷன், காமெடி, த்ரில்லர், காமெடி என 80, 90, 20 என எல்லா காலங்கயில் நிறைய வகையில் படங்கள் வந்துள்ளன.
இதில் காமெடி படங்கள் மட்டும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. காமெடி படங்களை அவ்வளவு எளிதில் எடுத்துவிட முடியாது, கொஞ்சம் டைமிங், ரைமிங் மாறினாலும் அந்த சீன் மக்கள் மனதில் நிற்காது.
காமெடியில் நடிகர்களை தாண்டி நாயகிகளும் அவர்களுக்கு இணையாக கலக்கியுள்ளார்கள். அப்படி தமிழ் சினிமா வரலாற்றில் காமெடியில் கலக்கி இப்போதும் மக்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்களை பற்றி பார்ப்போம்.
மனோரமா
காமெடி நாயகி என்று பெயர் சொன்னாலே முதலில் நம் கண்முன் வந்துவிடுவார் மனோரமா என்கிற ஆச்சி. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு கை பார்த்துவிடுவார், சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்துவார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பெண் கலைஞர்களுக்கு இவர் ஒரு உதாரணம் என்றே கூறலாம். 1500 படங்கள், 5000 மேடை நாடகங்கள், தொலைக்காட்சியில் நாடகங்கள் என அவரது பங்கு சினிமா ஏராளம்.
இப்போது உள்ள காமெடி நடிகைகளுக்கு வழி வகுத்தவரே இவர்தான். நடிப்பதை தாண்டி பாடல்களும் ஆச்சி பாடுயுள்ளார், அதோடு 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள நாயகி என்ற பெருமையோடு கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.
கலைமாமணி, பத்மஸ்ரீ, துணை நடிகைக்கான தேசிய விருது, பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது என இவர் வாங்கிய உயரிய விருதுகள்.
கோவை சரளா
மனோரமா ஆச்சியை தொடர்ந்து தமிழ் சினிமாவை காமெடி மூலம் ஆள வந்தவர் நடிகை கோவை சரளா. கோவையில் இருந்து வந்ததால் கோவை சரளா என்பதே இவரது பெயராகிவிட்டது.
இவரும் மனோரமா போல 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். சரளா 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், துணை நடிகையாக 30 வருடங்களாக சினிமாவில் ராஜ்ஜியம் செய்துள்ளார்.
திருமண செய்துகொள்ளாத நாயகிகள் லிஸ்டில் இவரும் இருக்கிறார். திருமணம் குறித்து ஒரு பேட்டியில் கேட்டபோது, நான் திருமணம் செய்து ஒருவரை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என கூறியிருந்தார்.
கோவை சரளாவுக்கு சரியான ஜோடி என்றால் அது வடிவேலு அவர்கள் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் நிறைய இருக்கிறது, இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
கோவை சரளா 2003ல் சிறந்த காமெடி நடிகைக்காக நந்தி விருது விஜய் டிவியின் விருது காஞ்சனா படத்திற்காக வாங்கியிருக்கிறார். சதிலீலாவதி, பூவெல்லாம் உன் வாசம், உளியின் ஓசை படங்களுக்காக மாநில விருது பெற்றுள்ளார்.
ஆர்த்தி
ஹாரதி ரவி ஆனால் சினிமா ரசிகர்களுக்கு இவரை ஆர்த்தி என்ற பெயருடன் தான் தெரியும். தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்த வந்த இவர் படிப்பிற்காக சினிமாவில் இருந்து இடைவேளை விட்டு படிப்பில் அக்கறை காட்டி வந்தார்.
பின் மீண்டும் நடிக்க வந்த அவர் அருள், கிரி, படிக்காதவன், குட்டி என தொடர்ந்து படங்கள் நடித்தார். காமெடி நடிகையாக வளர்ந்த ஆர்த்திற்கு 2012ம் ஆண்டு மாநில விருதும் கிடைத்தது. இவர் தனது நீண்டநாள் நண்பரான கணேஷ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அரசியலிலும் ஈடுபட்டு வந்த ஆர்த்தி 2017ம் ஆண்டு கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஜாங்கிரி மதுமிதா
இவர் நிறைய படங்கள் நடிக்கவில்லை என்றாலும் உதயநிதி நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இவரும் சந்தானமும் சேர்ந்து காமெடி காட்சிகள் மக்களிடம் படு பிரபலம்.
அட தேன் அட இது செம ஹிட்டானது இவர் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தான் முதன் முதலில் தனது நடிப்பை தொடங்கியுள்ளார்.
அப்படத்திற்கு பிறகு நன்கு பிரபலமான மதுமிதா தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாள் பாலகுமாரா, ஜில்லா, காஞ்சனா 2, விஸ்வாசம் என பெரிய ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர் பெரிய பிரச்சனைகளுக்கு பிறகு வெளியே வந்தார்.
ஊர்வசி
கவிதா ரஞ்சனி, சினிமாவிற்கு வந்த பிறகு ஊர்வசி என்ற பெயர் வந்தது. நடிகை என்பதை தாண்டி கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
நாயகியாக 1983ம் ஆண்டு முந்தானை முடிச்சு படம் மூலம் வலம் வர ஆரம்பித்தார்.
அவரது மிகச் சிறந்த படங்கள் என்றால் மைக்கேல் மதன காம ராஜன், பஞ்ச தந்திரம், மகளிர் மட்டும், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா போன்ற படங்களை கூறலாம்.