தேவி ஸ்ரீ பிரசாத்தின் சூப்பர்ஹிட் தமிழ் பாடல்கள்! ஸ்பெஷல் தொகுப்பு
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது தெலுங்கில் டாப் இசையமைப்பாளராக இருந்து வரும் அவர் தமிழில் குறைந்த அளவே படங்களில் பணியாற்றி இருக்கிறார். தமிழில் அவரது சூப்பர்ஹிட் பாடல்கள் பற்றிய ஸ்பெஷல் தொகுப்பு இதோ
கண்மூடி திறக்கும்போது - சச்சின்
விஜய் நடித்த சச்சின் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் தான் இசைமைத்து இருந்தார். ஹீரோயின் அழகை வர்ணிக்கும் 'கண்மூடி திறக்கும்போது' பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது.
நா.முத்துக்குமார் எழுதிய வரிகளில் டிஎஸ்பி அவரே பாடி இருப்பார். தற்போதும் இந்த பாடலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
பாக்காத என்னை பாக்காத- ஆறு
சூர்யா - த்ரிஷா நடித்து இருந்த ஆறு படத்தில் மிகப்பெரிய ஹிட் ஆன பாடல். நா.முத்துக்குமார் எழுதிய வரிகள், திப்புவின் குரல் என ரசிகர்களை அதிகம் ஈர்த்த இந்த பாடல், காதல் தோல்வியை சந்தித்தவர்க்ளின் பேவரைட்டாக தற்போதும் இருந்து வருகிறது.
டாடி மம்மி வீட்டில் இல்ல.. - வில்லு
வில்லு படத்தில் வரும் ஐட்டம் பாடல் இது. டிஎஸ்பியின் ஹிட் பாடல்களில் ஒன்றான இது ஹிட் ஆக விஜய்யின் டான்ஸும் முக்கிய காரணம்.
உயிரே உயிரே பிரியாதே - சந்தோஷ் சுப்ரமணியம்
'உயிரே உயிரே பிரியாதே.. உயிரை தூக்கி ஏரியாதே, கனவே கனவே கலையாதே.. கண்ணீர் துளியில் கறையாதே' என்ற இந்த பாடலும் காதல் தோல்வியை சந்தித்தவர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது.
நா.முத்துக்குமாரின் வரிகளில் சாகர் இந்த பாடலை பாடி இருக்கிறார்.
புல்லட் பாடல் - வாரியர்
லிங்குசாமி இயக்கிய வாரியர் படத்திற்காக டிஎஸ்பி இசையமைத்த பாடல் தான் புல்லட். சிம்பு தான் அந்த பாடலை பாடி இருந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. குறிப்பாக இளைஞர்களை இந்த பாடல் அதிகம் கவர்ந்தது. கடந்த சில மாதங்களில் இன்ஸ்டாகிராமில் எங்கு பார்த்தாலும் இந்த பாடல் தான் ரீல்ஸ்சாக அதிகம் உலா வந்தது என்பதையும் மறுக்க முடியாது.
நீ வரும்போது - மழை
மழை படத்திற்காக டிஎஸ்பி இசையில் சித்ராவின் குரலில் எல்லோரையும் சுண்டி இழுத்த பாடல் இது. ஷ்ரேயாவின் நடனமும் அந்த பாடல் ஹிட் ஆக ஒரு காரணம்.
இதே படத்தில் வரும் 'மண்ணிலே' பாடலும் பெரிய ஹிட் ஆனது. எஸ்பிபி அந்த பாடலை பாடி இருந்தார்.
மேலும் டிஎஸ்பி இசையில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் வேறு என்னென்ன என்பதை கமெண்டில் சொல்லுங்க.