சில படங்கள் எடுத்தாலும் மாஸ் படங்கள் இயக்கிய தரணி படங்கள் ஒர் பார்வை
இயக்குனர் தரணி
இயக்குனர் தரணி, குறிப்பிட்ட சில படங்களே இயக்கி பின் காணாமல் போனவர்.
முதன்முறையாக இவர் எதிரும் புதிரும் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியுள்ளார். சிறந்த படம் என்பதற்காக தமிழ்நாடு மாநில விருது எல்லாம் பெற்றார்.
அவர் இயக்கிய அனைத்துமே சிறந்த படங்கள் என்று தான் கூற வேண்டும்.
எதிரும் புதிரும் (1999)
இயக்குனர் தரணி, வி.சி.ரமணி என்ற தனது பெயருடன் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
முதல் படமே அரசியல் சம்பந்தப்பட்ட கதை. மம்முட்டி, நெப்போலியன், சங்கீதா. மனோரமா, கவுண்டமணி, செந்தில் மற்றும் நாசர் என நடித்துள்ளனர்.
ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியர், பயங்கரவாதி வீரையனின் சகோதரரான அரசப்பனைப் பிடிக்க முயன்ற காவல்துறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் போது, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்.
இந்த படத்திற்கு தமிழக அரசின் மாநில விருது எல்லாம் கிடைத்துள்ளது.
தில் (2001)
தரணி இயக்கிய இந்த படத்தில் விக்ரம், லைலா, நாசர், விவேக் என பலர் நடித்துள்ளனர்.
வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான இப்படம் ரூ. 53 கோடி வரை வசூலித்துள்ளது.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நினைக்கும் ஒரு இளைஞன். கண் எதிரே போலீசே தவறு செய்ய தில்லாக நேரடியாக அவருடன் மோதுகிறார். இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், போலீஸ் அதிகாரியாகிறாரா என்பது கதை..
தூள் (2003)
தரணி இயக்கிய இந்த படத்தில் விக்ரம் தான் நாயகன். இவருடன் ஜோதிகா, விவேக், ரீமா சென், மயில்சாமி என பலர் நடித்துள்ளனர்.
தனது சொந்த கிராமத்தில் இருக்கும் பிரச்சனைக்காக அரசியல் பிரபலத்தை காண சென்னை வரும் நாயகன்-நாயகி ரவுடிகளால் பிரச்சனைகளை சமாளித்து தங்களது ஊருக்கு எப்படி நன்மை சேர்க்கின்றனர் என்பது கதை.
கில்லி (2004)
இந்த படத்திற்கு எந்த ஒரு அறிவிப்பும் தேவையே இல்லை.
சினிமா பார்க்கும் எல்லா ரசிகர்களுக்கும் இந்த படம் அத்துபடி. கபடி விளையாட வேறொரு ஊருக்கு செல்லும் நாயகன், நாயகி ஒரு பிரச்சனையில் இருப்பதை அறிந்து அவரை காப்பாற்ற போராடும் போராட்டமே கில்லி கதை.
விஜய், த்ரிஷா ஜோடியாக நடிக்க வித்யாசாகர் இசையமைக்க இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே செம ஹிட். படம் ரூ. 50 கோடி வரை வசூல் சாதனை செய்திருக்கிறது.
குருவி (2008)
கார் பந்தய வீரரான வெற்றிவேல் மலேசியாவைச் சேர்ந்த டான் ஒருவர் தனது தந்தைக்கு பெரும் தொனை கடன் பட்டிருப்பதை தெரிந்துகொள்கிறார்.
அந்த டானை சந்திக்க போகும் போது தனது தந்தை உயிருடன் இருப்பதையும், சிறைபிடிக்கப்பட்டிருப்பதையும் உணர்கிறார்.
அதன்பிறகு நாயகன் டானிடம் இருந்து எப்படி தனது அப்பாவை மீட்கிறார் என்பதே கதை.