மு.கருணாநிதி முதல் மதன் கார்க்கி வரை.. கோலிவுட்டின் சிறந்த வசனகர்த்தாக்கள்! ஸ்பெஷல் தொகுப்பு
அனல் பறக்கும் வசனங்கள் எழுதிய தமிழ் சினிமாவில் வசனகர்த்தாக்கள் பற்றிய ஸ்பெஷல் தொகுப்பு இதோ..
மு.கருணாநிதி
சினிமாவில் எழுதிய வசனங்கள் மக்களை கவர்ந்ததால் பிற்காலத்தில் அரசியல் தலைவராக களமிறங்கி தமிழக முதலைச்சராக பல முறை பதவி வகித்தார். அந்த அளவுக்கு அவரது வசனங்கள் தமிழ்நாட்டில் பிரபலம்.
பராசக்தி படத்தில் வரும் கோர்ட் காட்சி, அதில் சிவாஜி பேசும் நீளமான வசனமே மு.கருணாநிதியின் திறமைக்கு சிறந்த எடுத்துத்துக்காட்டு. மேலும் அவரது சிறந்த வசனங்களை பட்டியலிட்டால் மிகப்பெரிய லிஸ்ட் வரும்.
ஆரூர்தாஸ்
ஆயிரம் படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் வசனங்கள் எழுதி இருப்பவர் வசனகர்த்தா ஆரூர்தாஸ். அவரது வசனங்களை பேசாத நடிகர்கள் அவரது காலகட்டத்தில் மிக குறைவு தான்.
'கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள்' என அவரது அறுபது ஆண்டு கால சினிமா வாழ்க்கையை புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார் அவர்.
விசு
தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது பார்த்தாலும் வியக்கும்படியான வசனங்களை படங்களில் எழுதி இருப்பவர் விசு. பெரும்பாலான படங்கள் குடும்ப உறவுகள் பற்றி தான் இருக்கும், அதை பற்றி அவரது வசனங்களும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு இருக்கும்.
மதன் கார்க்கி
பாடலாசிரியராக மட்டுமின்றி பல படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றி இருக்கிறார் மதன் கார்க்கி. பெரும்பாலான ஷங்கர் படங்களை அவர் இருப்பார்.
எந்திரன், 2.0, மகாநடி, மாஸ், பாகுபலி, ஆர்ஆர்ஆர், ராதே ஷாம் என பல படங்களில் அவர் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறார்.