தமிழ் சினிமாவின் சிறந்த பட தொகுப்பாளர்கள்
ஒரு திரைப்படத்தின் முடிவு தொகுப்பாளரின் அறையில் தான் முடிவு செய்யப்படுகிறது, ஏன்னென்றால் நாள் கணக்காக படத்தை எடுத்து அதை மொத்தமாக கொட்டும் இடம் தொகுப்பாளர்களிடம் தான். ஒரு படத்தின் நீளம், சவுண்ட் எபக்ட்ஸ், டயலாக், என அனைத்தை இணைக்கும் பணி தொகுப்பாளர்களிடமே செல்லும். ஒரு படத்தை பார்வையாளர்கள் உணர்வு பூர்வமாக உணர காரணாமாக இருக்கும் தொகுப்பாளர்கள் தான் திரைத்துறையில் முக்கிய ஆட்களாக பார்க்கப்படுகிறார்கள்.
அப்படியான சிறந்த பணியை செய்து வரும் சிறந்த தொகுப்பாளர்கள் குறித்த பட்டியலை தான் பார்க்கவுள்ளோம்.
ஸ்ரீகர் பிரசாத்
இந்திய சினிமாவில் அறியபடும் சிறந்த தொகுப்பாளராக இருந்து வருபவர் ஸ்ரீகர் பிரசாத். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட முக்கிய மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். மேலும் இந்தியளவில் பல மொழிகளில் பணியாற்றியதன் காரணமாக இவரின் பெயர் Limca Book of Records-ல் People of the Year - 2013-ல் இடம் பெற்றுள்ளது. RRR, காத்து வாக்குல ரெண்டு காதல் என ஏகப்பட்ட படங்களை தொடர்ந்து பொன்னியின் செல்வன், இந்தியன் 2 உள்ளிட்ட பிரமாண்ட படங்களிலும் பணியாற்றி வருகிறார் ஸ்ரீகர் பிரசாத்.
ஆண்டனி
தமிழ் சினிமாவின் மிக முக்கிய தொகுப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருபவர் ஆண்டனி. காக்க காக்க படத்தில் தொடங்கி தொடர்ந்து ஏகப்பட்ட முக்கிய தமிழ் படங்களில் பணியாற்றி வருகிறார் ஆண்டனி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஆண்டனி பட தொகுப்பை செய்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவின் பிரமாண்டமாக பார்க்கப்பட எந்திரன் படத்தில் ஆண்டனி-ன் பட தொகுப்பு பெரியளவில் பேசப்பட்டது. இந்தாண்டில் இவரின் வெந்து தணிந்தது காடு, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
ரூபன்
இப்பொது ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்களில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ரூபன், 2011 ஆம் ஆண்டு கண்டேன் திரைப்படத்தின் மூலம் தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார் ரூபன். அதன்பின் தொடர்ச்சியாக இவரின் திரைப்படங்கள் பெரியளவில் பேசப்பட்டது. ராஜா ராணி, தெறி, வேதாளம் என முக்கிய ஹிட் படங்களை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் ரூபன் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும் 2019-ல் பிகில், விஸ்வாசம் என இரண்டு டாப் நடிகர்களின் படங்களின் தொகுப்பாளராக இருந்துள்ளார் ரூபன்.
பிரவீன் கே.எல்
தமிழ் சினிமாவின் மற்றுமொரு பிஸியான தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரவீன் கே. எல், 2007-ஆம் ஆண்டு சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரவீன். பின் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா படங்களின் பணியாற்றியிருந்தார். ஆனால் 2011 ஆம் ஆண்டு சென்சேஷனல் படமாக பேசப்பட்ட ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் பணியாற்றி தேசிய விருதை தட்டி சென்றார் பிரவீன் கே. எல். அதன்பின் வரிசையாக பல முக்கிய படங்களில் பணியாற்றியுள்ள பிரவீன் தற்போது தளபதி 66 படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
பிலோமின் ராஜ்
தமிழ் சினிமாவின் சமீபத்திய சென்சேஷன் ஆகியுள்ளார் பிலோமின் ராஜ், மாநகரம் படத்தில் தொடங்கி தொடருந்து லோகேஷ் கனகராஜ் உடன் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றி இருக்கிறார் பிலோமின் ராஜ். அதுமட்டுமின்றி மெஹந்தி சர்க்கஸ், ராட்சசி, மண்டேலா, ஜெய் பீம், டாணாக்கரான் என வரிசையாக சிறந்த படங்களின் தொகுப்பாளராக இருந்துள்ள பிலோமின் ராஜ் மீது தற்போது தமிழ் சினிமாவின் பார்வை திரும்பியுள்ளது என்றே கூறலாம்.
தெலுங்கில் ரீமேக் ஆகும் தளபதி விஜய்யின் சூப்பர்ஹிட் திரைப்படம்.. ஹீரோவாக நடிக்கப்போவது இவரா?