தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன.. இதோ லிஸ்ட்
தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
மாவீரன்:
சிவகார்த்திகேயனின் திரை வாழக்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று மாவீரன். இப்படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், சரிதா, மோனிஷா, யோகி பாபு, மிஸ்கின் என பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை இப்படம் பெற்றது.
வினோதய சித்தம்:
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்தாலும் மக்களின் மனதை கவர்ந்து மாபெரும் வெற்றிப்படமாக மாறியது வினோதய சித்தம் திரைப்படம்.
சமுத்திரக்கனி இயக்கி நடித்திருந்த இப்படத்தில் தம்பி ராமையா முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருந்தார். தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.
ஓ மை கடவுளே:
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கற்பனை, காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்து வெளிவந்த திரைப்படம் ஓ மை கடவுளே. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ஹிட் கொடுத்தது.
மரகத நாணயம்:
நகைச்சுவை கலந்த சிறந்த அட்வென்ச்சர் திரைப்படம் மரகத நாணயம். ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், டேனியல், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
ஆயிரத்தில் ஒருவன்:
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த சமயத்தில் மக்கள் மத்தியில் தோல்வியை தழுவினாலும், தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
புலி:
சிம்புதேவன் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்த திரைப்படம் புலி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, தம்பி ராமையா, பிரபு, சுதீப் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இரண்டாம் உலகம்:
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடித்து 2013ல் வெளிவந்த திரைப்படம் இரண்டாம் உலகம். இது ஒரு கற்பனை காதல் கதை, இதில் இரண்டு உலகங்களில் நடக்கும் சம்பவங்கள் காட்டப்படுகின்றன.

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
