தமிழ் சினிமாவின் சிறந்த பெண் டப்பிங் கலைஞர்கள்.. ஒரு சிறப்பு பார்வை
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை ரசிகர்கள் கொண்டாட முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் குரல் தான். ஆம், படங்களில் கதாநாயகிகள் பேசும் வசனத்திற்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அப்படி, கதாநாயகிகளுக்கு அழகாக டப்பிங் பேசும் டப்பிங் கலைஞர்கள் குறித்து பார்க்கவுள்ள சிறப்பு பார்வை தான் இந்த கட்டுரை..
உமா
தமிழில் மிகவும் பிரபலமான டப்பிங் கலைஞர்களில் ஒருவர் உமா. இவர் அனுஷ்காவிற்காக பாகுபலி படத்தில் டப்பிங் பேசியுள்ளார். மேலும், இறுதிச்சுற்று ரித்திகா சிங், களவாணி ஓவியா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா நந்திதா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் பேசி இருக்கிறார். குறிப்பாக பாகுபலி மற்றும் இறுதி சுற்று படத்தின் கதாநாயகிகளுக்கு இவர் பேசிய டப்பிங் தான், இவருக்கு திரையுலகில் அடையாளத்தை பெற்று தந்துள்ளது.
தீபா
முன்னணி நடிகை நயன்தாராவின் பெரும்பாலான படங்களுக்கு டப்பிங் பேசும் ஒரே நபர் தீபா மட்டும் தான். ராஜா ராணி படத்தில் இருந்து நயன்தாராவிற்காக டப்பிங் பேசத்துவங்கிய தீபா, மூக்குத்தி அம்மன், தனி ஒருவன், தர்பார், அண்ணாத்த என இன்று வரை அனைத்து படங்களுக்கும் டப்பிங் பேசி வருகிறார். நயன்தாரா மட்டுமின்றி, காஜல் அகர்வால், ஜோதிகா போன்ற நடிகைகளுக்கும் தீபா டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீனா ரவி
இன்றைய தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராகவும், வளர்ந்து வரும் இளம் நடிகையாகவும் கலக்கி வருபவர் ரவீனா ரவி. இவர் பிரபல முன்னணி டப்பிங் கலைஞர் ரவீனாவின் மகள் ஆவார். ரவீனா ரவி தமிழில் வெளிவந்த அனேகன், ஐ, மாஸ்டர், காதலும் கடந்துபோகும் போன்ற பல படங்களின் கதாநாயகிகளுக்கு சூப்பராக டப்பிங் பேசி அசத்தியிருக்கிறார். குறிப்பாக ஐ படத்தில் ஏமி ஜாக்சனுக்காக ரவீனா ரவி பேசிய டப்பிங் வசனங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
மானசி
முன்னணி நடிகை சமந்தாவின் அழகிய குரலாக பல படங்களில் டப்பிங் பேசிய ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட டப்பிங் கலைஞர் மானசி. சமந்தா மட்டுமின்றி தமன்னா நடிப்பில் வெளிவந்த பாகுபலி, தேவி, படங்களுக்கும் மானசி பேசிய டப்பிங் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. மேலும் மாரி, ஓ மை கடவுளே, மாநகரம் மற்றும் மாறன் ஆகிய படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார் மானசி.
சவிதா
தமிழ் சினிமாவின் மூத்த டப்பிங் கலைஞர் என்றால் அது சவிதா தான். ஆம், 1992ஆம் ஆண்டில் துவங்கி இன்று வரை பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். குறிப்பாக நடிகை சிம்ரன் நடித்து வெளிவந்த 90% சதவீத படங்களுக்கும் டப்பிங் பேசிய ஒரே நபர் சவிதா மட்டும் தான். மேலும், ஸ்ரேயா, ஹன்சிகா, மீரா ஜாஸ்மின், ஆகிய பல நட்சத்திரங்களுக்கு டப்பிங் பேசி அசத்தியுள்ளார். இதுமட்மின்றி திரிஷாவின் 19 ஆண்டு திரை பயணத்தில் பெரிய பங்கு சவிதாவிற்கு உண்டு, ஏனென்றால், இதுவரை திரிஷா நடித்த 23 படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார் சவிதா. இவர் மட்டுமின்றி இவரது மகளும் தற்போது இளம் நடிகை அனிகாவிற்கு டப்பிங் பேசுகிறார். விஸ்வாசம் படத்தில் அனிகாவிற்கு டப்பிங் பேசியது இவருடைய மகள் தான், என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படம் வலிமையா? பீஸ்ட்டா?- சினிமா பிரபலம் ஓபன் டாக்