கமர்ஷியல் படங்களின் ஹிட் பட இயக்குனர் ஹரியின் சிறந்த படங்கள்
இயக்குனர் ஹரி
தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் எல்லா விதமான கதைக்களத்திலும் படங்கள் இருக்கும்.
அப்படி தமிழில் தனக்கு வரும் ஸ்டைலில் தொடர்ந்து படங்கள் இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் ஹரி. 2002ம் ஆண்டு வெளியான தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இப்படத்திற்கு பிறகு சாமி, அருள், கோவில், ஆறு என தொடர்ந்து நிறைய கமர்ஷியல் படங்களை இயக்கி வெற்றி கண்டார். சரி இதுவரை இவர் இயக்கியதில் சிறந்த படங்கள் பற்றி பார்ப்போம்.
சாமி (2003)
இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விக்ரம் திரைப்பயணத்தின் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது சாமி. படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
இதில் விக்ரம் ஒருச்சாமி, ரெண்டுச்சாமி, மூனுச்சாமி என பேசிய வசனம் முதல் படத்தில் இடம்பெற்ற அனைத்து வசனங்களுமே செம ஹிட். வழக்கமான போலீஸ் கதாபாத்திரமாக இல்லாமல் முற்றிலும் புதியதாக விக்ரமின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார் ஹரி.
கோவில் (2004)
சிம்பு, சோனியா அகர்வால், வடிவேலு, நாசர், ராஜ்கிரண் என பலர் நடிக்க 2004ம் ஆண்டு வெளியான படம் கோவில்.
மதத்தால் பிரிந்திருக்கும் இரு கிராமங்களில் உள்ள நாயகன்-நாயகி காதலிக்க அவர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே கதை.
அழகான கிராமத்து பின்னணியில் தெளிவாக படத்தை கொண்டு சென்றிருப்பார் ஹரி.
அருள் (2004)
4 சகோதரர்களில் இளையவரான அருள் தனது உடன் பிறந்தவர்களின் ஒருவர் செய்த தவறுக்கு பழியை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
இதனால் தந்தையின் கோபத்திற்கு ஆளானவர் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைகிறார். பின் அவர் எப்படி அரசியலில் ஜெயித்து அப்பாவின் பாசத்தை பெறுகிறார் என்பது கதை.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம்-ஜோதிகா ஜோடியாக நடித்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் தான்.
ஐயா (2005)
இதுதான் இன்று கோலிவுட்டை தாண்டி பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் முதல் படம். இதில் அவர் கொஞ்சம் குண்டாக காணப்படுவார். அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் பேச வைத்தவர்.
2005ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியாக இப்படத்தின் சரத்குமார், பிரகாஷ் ராஜ், வடிவேலு, நெப்போலியன், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர்.
ஆறு (2005)
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணியில் வந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஆறு. சூர்யா, த்ரிஷா, வடிவேலு, கலாபவன் மணி, டெல்லி கணேஷ் என பலர் நடித்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை.
விறுவிறுப்பான ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படம்.
சிங்கம் (2010)
ஹரி, சூர்யா கூட்டணியில் வெளிவந்த இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.
மாஸ் வசனங்கள், விறுவிறுப்பான காட்சிகள் என செம மாஸ் கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் சூர்யாவுடன், அனுஷ்கா, விவேன், நாசர், சந்தானம், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். எதற்கும் பயப்படாத நியாயமான போலீஸ் அதிகாரி பற்றிய கதை.