ஓ மனமே டு தொடுவானம்.. ஹாரிஸ் ஜெயராஜின் சூப்பர்ஹிட் பாடல்கள் ஸ்பெஷல் தொகுப்பு
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழில் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. அதை தொடந்து மஜ்னு, சாமி, கோவில், லேசா லேசா, காக்க காக்க என தொடர்ந்து ஹிட் ஆல்பங்களாக கொடுத்தார்.
தற்போது கடந்த சில வருடங்களாக அவர் பெரிய ஹிட் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் அவர் தி லெஜண்ட் படம் மூலமாக கம்பேக் கொடுத்து இருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். படம் வெற்றியோ தோல்வியோ, ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையையே பாராட்டாமல் இல்லை. பாடல்கள் முதல் பின்னணி பிஜிஎம் வரை அவர் மிரட்டி இருப்பதாகவே சொல்கின்றனர்.
தற்போது ஹாரிஸ் ஜெயராஜின் கெரியரில் ரசிகர்களை கவர்ந்து சூப்பர்ஹிட் ஆன சில பாடல்கள் பற்றி பார்க்கலாம்.
மின்னலே - வசீகரா
ஹாரிஸ் ஜெயராஜின் முதல் ஆல்பம் இது. மிகப்பெரிய ஹிட் ஆன வசீகரா பாடல் தற்போதும் ஹாரிஸ் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் முதலிடம் பிடித்து இருக்கும்.
உள்ளம் கேட்குமே - ஓ மனமே
தமிழ்நாட்டில் காதல் தோல்வி அடைந்தவர்களின் ப்ளே லிஸ்டில் இந்த பாடல் தவறாமல் இருக்கும். ஹாரிஸ் இசை + கண்களை ஈரமாக்கும் அளவுக்கு இருக்கும் அந்த பாடலின் வரிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தாம் தூம் - அன்பே என் அன்பே
ஜெயம் ரவி - கங்கனா நடித்த தாம் தூம் படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட் ஆனது. அதிலும் அன்பே என் அன்பே பாடல் முகப்பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
கஜினி - சுட்டும் விழி சுடரே
முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா - அசின் நடித்த கஜினி படத்தில் வரும் 'சுட்டும் விழி சுடரே' பாடல் வரிகளை நா.முத்துக்குமார் எழுதி இருப்பார்.
ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் இந்த பாடலை பாடி இருக்கின்றனர்.
வேட்டையாடு விளையாடு - மஞ்சள் வெயில்
ஹரிஹரன், க்ரிஷ் மற்றும் நகுல் ஆகியோர் பாடிய 'மஞ்சள் வெயில்' பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் கெரியரில் ஹிட் ஆல்பமான 'வேட்டையாடு விளையாடு' படத்தில் முக்கிய ஒன்றாகும். தாமரை அந்த பாடலின் வரிகளை எழுதி இருப்பார்.
அதே ஆல்பத்தில் பார்த்த முதல் நாளே பாடலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்று.
அனேகன் - தொடுவானம்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த படம் அனேகன். காதல் உணர்வுகளை சொல்லும் இந்த பாடல் வரிகளை வைரமுத்து எழுதி இருப்பார்.
ஹரிஹரன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதே படத்தில் வந்த டங்கா மாரி பாடலும் பெரிய ஹிட் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
என்னை அறிந்தால் - உனக்கென்ன வேணும் சொல்லு
அப்பா மகள் சென்டிமென்ட்டை காட்டும் இந்த பாடல் வருடங்கள் கடந்து தற்போதும் அதிகம் ரசிக்கப்படும் பாடல்களில் ஒன்று.
என்னை அறிந்தால் படத்திற்காக இந்த பாடலை ஹாரிஸ் இசையமைத்து இருக்கிறார். தாமரை வரிகளில், பென்னி தயாள் மற்றும் மஹதி பாடி இருக்கின்றனர்.
ஏழாம் அறிவு - எம்மா எம்மா
வாரணம் ஆயிரம் - அஞ்சல
ஆதவன் - வாராயோ வாராயோ
உன்னாலே உன்னாலே - 'உன்னாலே உன்னாலே' பாடல்
இந்த பாடல்கள் தவிர நீங்கள் அதிகம் ரசிக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்னென்னெ என்பதை கமெண்டில் சொல்லுங்க.