10 வருடம் நடந்துள்ள விஜய் டெலிவிஷன் விருதில் சிறந்த நாயகிக்கான விருதுகள் வாங்கியவர்கள் யார் யார்?... லிஸ்ட் இதோ
விஜய் டிவி
தமிழ் சின்னத்திரையில் மக்களிடம் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி.
இவர்கள் முதலில் டார்க்கெட் செய்ததே இளைஞர்களை தான், அவர்களை தங்கள் தொலைக்காட்சி பக்கம் வரவைக்க விஜய் டிவி நிறைய புத்தம்புதிய ரியாலிட்டி ஷோக்களை கொண்டு வந்து கவர்ந்தார்கள்.
இப்போது புத்தம் புதிய சீரியல்கள் மூலமாகவும் மக்களை கவர்ந்து தமிழ் சின்னத்திரை முன்னணி தொலைக்காட்சியாக வளர்ந்துள்ளார்கள்.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் 10வது விஜய் டெலிவிஷன் விருது விழா நடந்துள்ளது. அதில் சிறந்த நாயகிக்கான விருதை சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியா 2வது முறையாக வாங்கியுள்ளார். 9வது ஆண்டு விருது விழாவிலும் இவர்தான் சிறந்த நாயகி விருது வென்றிருந்தார்.
அதில் யார் யார் என்ன விருது வென்றுள்ளார்கள் என்பதை அறிந்திருப்போம். சரி நாம் இப்போது இதுவரை நடந்த விஜய் டெலிவிஷன் விருதில் சிறந்த நாயகிக்கான விருது வென்ற நடிகைகளின் லிஸ்ட் காண்போம்.