தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த வரலாற்றுப் படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ
தமிழ் சினிமா படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் சிறந்த வரலாற்றுப் படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பொன்னியின் செல்வன் 1& 2:
பிரம்மாண்ட படைப்பாக கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மணி ரத்னம் இயக்கியிருந்தார்.
அமரர் கல்கி எழுதிய நாவலை மையமாக கொண்டு பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக வெளிவந்தது. இதில் 2022ஆம் ஆண்டு முதல் பாகமும், 2023ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும் வெளிவந்தது.
விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர்.
மதராசபட்டினம்:
விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மதராசபட்டினம்.
இத்திரைப்படத்தில் ஆர்யா, ஏமி ஜாக்சன், நாசர், கொச்சின் ஹனீபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
ஆயிரத்தில் ஒருவன்:
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த சமயத்தில் மக்கள் மத்தியில் தோல்வியை தழுவினாலும், தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
அரவான்:
அரவான் 2012 இல் வெளியான ஒரு வரலாற்றுத் தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதை சு. வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டத்தில் வரும் ஒரு துணைக் கதை ஆகும். ஆதி கதாநாயகனாக நடித்த இப்படத்தை வசந்தபாலன் இயக்கினார்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
