இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்த சிறந்த பாடல்கள்.. ஒரு சிறப்பு பார்வை
தமிழ் சினிமாவில் தனது இசையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தில் துவங்கிய இவருடைய பயணம் இன்று வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இப்படி இசையால் நம்முள் வாழ்ந்துகொண்டிருக்கும் இளையராஜா இசையில் வெளிவந்த சிறந்த பாடல்களை பார்க்கவிருக்கும் தொகுப்பு தான் இந்த பட்டியல்..
மடை திறந்து
நிழல்கள் படத்தில் இளையராஜா இசையில் வாலியின் வரிகளில் உருவாகி வெளிவந்த மடைதிறந்த எனும் பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், எஸ்.பி.பியின் குரல் இப்படத்திற்கு ஒரு தனி சுவையை கொடுத்து இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.
கண்ணே கலைமானே
பாலு மஹேந்திரா இயக்கத்தில் கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் மூன்றாம் பிறை. இப்படத்திற்கு மிகப்பெரிய அடையாளமாக அமைந்தது இளையராஜாவின் இசை. ஆம், அதிலும் குறிப்பாக இளையராஜாவின் இசையில், கே.ஜே. ஜேசுதாசின் குரலில் வெளிவந்த கண்ணே கலைமானே பாடல் நம் மனதை உருகவைத்துவிட்டது.
தென்பாண்டி சீமையிலே
மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் நாயகன். இப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் பின்னியிருப்பார். நாயகன் படத்தை பற்றி பேசினால் கண்டிப்பாக அப்படத்தின் அடையாமளாக இருக்கும் தென்பாண்டி சீமையிலே பாடலை பற்றியும் பேசி தான் ஆகவேண்டும். ஆம், ஏனென்றால் படத்தின் வெற்றிக்கு அப்பாடலும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
சுந்தரி கண்ணால் ஒரு செய்தி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்து மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தளபதி. இளையராஜாவின் இசையில் உருவான இப்படத்தின் அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட். ஆனால், அதில் குறிப்பாக இன்றும் பல காதலர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் பாடல் என்றால் அது சுந்தரி கண்ணால் ஒரு செய்தி மட்டும் தான். அந்த அளவிற்கு அனைத்து தலைமுறை மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த பாடல்
சங்கீத ஜாதிமுல்லை
பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகி வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகும் காதல் ஓவியம். இப்படத்தின் கிளைமாக்சில் அனைவரையும் கண்கலங்க வைக்கும் பாடல் தான் சங்கீத ஜாதிமுல்லை. எஸ்.பி. பியின் குரலில் ஒலித்த இந்த பாடல் இன்றும் பலருடைய மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
தென்றல் வந்து தீண்டும் போது
நாசர் மற்றும் ரேவதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அவதாரம். இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற தென்றல் வந்து தீண்டும் போது எனும் பாடல் இன்றும் பல காதல் ஜோடிகளின் காலர் டோனாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு அவர்களின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்களில் ஒன்று தான் தென்றல் வந்து தீண்டும் போது.
சிவகார்த்திகேயன் VS விஜய் சேதுபதி! அடுத்த திரைப்படத்தில் எதிர்பார்க்காத கூட்டணி