இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் இசையில் வந்த சிறந்த பாடல்கள்
தமிழ் திரையுலகில் பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் இசையமைப்பாளராக சாதித்தது மட்டுமின்றி, தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்துள்ளார். மேலும் தற்போது இவர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறார்.
அப்படி அவர் இசையில் வெளிவந்த சில சிறந்த பாடல்கள் குறித்த பட்டியலை தான் பார்க்க இருக்கிறோம்.
கண்கள் இரண்டால்
ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானதே சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் முலம் தான். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சசிக்குமார் இயக்கிய இப்படத்தில் ஜெய், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மேலும் தனது முதல் திரைப்படத்திலே ஜேம்ஸ் வசந்தன் பெரியளவில் பெயரை பெற்றார். மதுரையின் 80-களில் நடந்த திரைப்படமாக உருவாகிய இப்படத்தில் அவரின் இசை பக்கபலமாக அமைந்தது.
இப்படத்தில் அமைந்த கண்கள் இரண்டால் பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இப்பாடலுக்கு இன்றளவும் பெரிய ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது. சுப்ரமணியபுரம் படத்தில் மட்டுமின்றி ஜேம்ஸ் வசந்தன் இசையில் வந்த பாடல்களில் இது தான் சிறந்தது என்பதில் சந்தேகமே இல்லை.
மெய்யான இன்பம்
மீண்டும் சசிகுமார் இயக்கிய படமான ஈசன் திரைப்படத்தில் அவருடன் பணியாற்றினார் ஜேம்ஸ் வசந்தன். இப்படத்திலும் அவரின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக மெய்யான இன்பம் பாடல் பெரிய ஹிட்டானது.
நான் போகிறேன்
இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாணயம். இப்படத்தில் SPB மற்றும் சித்ரா பாடிய ‘நான் போகிறேன்’ பாடல் பெரிய வரவேற்பை பெற்று ஹிட்டானது.
ஜில்லா விட்டு
ஈசன் திரைப்படத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பாடலான ஜில்லா விட்டு பட்டிதொட்டி எங்கும் ஹிட்டான பாடல், அப்போது இப்படம் பெரிய கவனத்தை பெற இந்த பாடலும் ஒரு காரணமாக அமைந்தது. அந்த அளவிற்கு வரவேற்பை பெற்ற இப்பாடல் ஜேம்ஸ் வசந்த் இசையில் வந்த சிறந்த ஒன்று.
காதல் சிலுவையில்
சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் மற்றுமொரு சிறந்த பாடல் காதல் சிலுவையில், காதல் பிரிவு குறித்து அமைந்த இப்பாடலில் பாடகர் சங்கர் மகாதேவன் தனது குரலின் முலம் ரசிகர்களை வசியம் செய்துவிடுவார்.
ஒரு வேட்கம் வருதே
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பசங்க. தமிழக மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான இப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த பாடல் அனைத்தும் ஹிட்டானது. இப்படத்தில் ரொமாண்டிக் பாடலாக அமைந்த ஒரு வேட்கம் வருதே சிறந்த பாடலாக அமைந்தது.
அன்பாலே
பசங்க திரைப்படத்தின் முக்கிய பாடலாக இடம் பெற்றது அன்பாலே அழகாகும் வீடு பாடல்.