வசூல் சாதனை படைத்த கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய சிறந்த படங்கள்- ஓர் பார்வை
கே.எஸ்.ரவிக்குமார்
திரைப்படங்கள் இன்றைய காலகட்ட மக்களுக்கு ஒரு முக்கிய பொழுதுபோக்காக உள்ளது.
மக்களை 2 மணி நேரம் திரையரங்கில் உட்கார வைத்து மும்முரமாக பார்க்க வைப்பது என்பது இப்போதெல்லாம் மிகவும் கடினமாக உள்ளது என்றே கூறலாம், இதனால் படைப்பாளிகள் கவனமாக கதைகளை இயக்குகிறார்கள்.
ஆனால் 90களில் ஒரு பொன்னான காலம் என்றே கூறலாம், திரைக்கு வந்த படங்கள் அப்படி இருக்கும். குடும்பம், காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு என எல்லாம் கலந்த கலவையான நிறைய படங்கள் வெளியாகியுள்ளது.
அப்படி அந்த காலத்தில் கதையும் இருக்கும் அதேசமயம் வசூலில் கலக்கிய நிறைய படங்களை இயக்கி சாதனை படைத்தவர் தான் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்கியதில் சிறந்த படங்களின் விவரத்தை காண்போம்.
தசாவதாரம் (2008)
உலகநாயகன் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து கலக்கிய ஒரு திரைப்படம் தசாவதாரம்.
விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் சிப்பால் எந்த அளவிற்கு மனிதர்களுக்கு பாதிப்பு என்பதை தெரிவிக்கும் இந்த படத்தில் 2004ம் ஆண்டு கடலில் உருவான சுனாமி காட்சியை போல தத்ரூபமாக இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் கிராபிக்ஸ் காட்சிகள் அமைத்திருப்பார்.
ரூ. 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 120 கோடி வரை எட்டியது. ‘
படையப்பா
ஊரில் பெரிய நபரான சிவாஜி குடும்பத்தில் பிறந்த ரஜினியை ஒரு தலையாக காதலித்து காதல் தோல்வியால் காதலித்தவரின் குடும்பத்தை அழிக்க நினைப்பார் ரம்யா கிருஷ்ணன். படம் குறித்து இவ்வளவு சொல்ல வேண்டும் என்பதே இல்லை, ஒவ்வொரு காட்சியும் மக்களுக்கு அத்துபடி தான்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மீண்டும் மீண்டும் அனைவரையும் பார்க்க வைக்கும் ஒரு படம்.
நாட்டாமை
நடிகர் சரத்குமார், விஜயகுமார், மீனா, குஷ்பூ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நாட்டாமை திரைப்படம் 1994ம் ஆண்டு ரிலீசானது. இதில் நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்ற வசனம் இன்றும் பல மீம்ஸ்களில் இடம்பெறுகிறது.
கிராமத்து சாயல் குடும்பக் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் பட்ஜெட் ரூ. 1.50 கோடி ஆகும். ஆனால் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி ரூ. 12 கோடி வரை வசூலை அள்ளிக் குவித்தது.
முத்து
ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த இப்படம் 1995ம் ஆண்டு ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியாகி பட்டய கிளப்பியது. பணக்காரனின் பிள்ளை வேலைக்காரனாக வாழும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.
100 நாட்களுக்கு மேல் ஓடிய இப்படத்தின் பட்ஜெட் ரூ. 5 கோடி. ஆனால் மொத்தமாக ரூ. 30 கோடி மேல் படம் வசூல் அள்ளியுள்ளது. வரலாறு அஜித் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமாக அமைந்த திரைப்படம்.
2006ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அஜித் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வெறும் ரூ. 17 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ. 55 கோடி வரை வசூல் செய்துள்ளது.
பஞ்ச தந்திரம்
2002ம் ஆண்டு வெளியான இப்படம் 4 நண்பர்கள் ஒரு தவறினை மறைக்க மேலும் மேலும் செய்யும் தவறுகளை நகைச்சுவையாக கொண்டு செல்லப்பட்ட ஒரு கதை. ரவிக்குமார் இயக்கம் தாண்டி வசனங்களும் அதிகம் பேசப்பட்டது.
அவ்வை சண்முகி
காதல் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி விவாகரத்து பெறுகிறார்கள்.
மீனாவின் மகள் அவருடனே வளர தன் மகள் மேல் அதிக பாசம் கொண்ட கமல் மகளை காண முன்னாள் மனைவி வீட்டிற்கு அவரது அம்மா சாயலில் பெண் வேடம் போட்டு பணிப்பெண்ணாக செல்கிறார். பின்னர் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதே படத்தின் கதை.