இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் சிறந்த படங்களின் லிஸ்ட் பார்க்கலாம் வாங்க!!
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் கார்த்திக் சுப்புராஜ். தற்போது இவர் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்களை பார்க்கலாம் வாங்க..
பீட்சா
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான "பீட்சா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தார் கார்த்திக் சுப்புராஜ்.
horror கதை அமசத்தில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து இருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பீட்சா 2 வெளியானது ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஜிகர்தண்டா
நடிகர் சித்தார்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் ஜிகர்தண்டா. மதுரையில் இருக்கும் கேங்ஸ்டரின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசையில் செல்லும் இயக்குனர்.
அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமாக காட்டி இருப்பார் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்திற்காக பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகர் என்ற பிரிவில் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பேட்ட
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம் ஒரு மெகா ஹிட் திரைப்படமாக மாறியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கிளாசிக் நடிப்பை பார்த்ததாக அவரது ரசிகர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மகான்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான மகான் திரைப்படம் நேரடியாக OTT - தளத்தில் வெளியானது. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்திருப்பார். மேலும் முக்கியமான ரோலில் சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
இந்தப்படத்தில் அப்பா - மகன் உறவிற்குள் இருக்கும் காந்தியம் சிந்தனை சார்ந்த சிக்கல்களை, ஆக்ஷன் அதகளமாக காட்சி படுத்தி இருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தலைப்பில் வெளிவந்தது. எஸ் ஜே சூர்யா - ராகவா லாரன்ஸ் இணைந்து நடித்திருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து இருந்தனர். பல பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
