பிரபல இயக்குனர் லிங்குசாமியின் சிறந்த படங்கள்- ஓர் பார்வை
லிங்குசாமி
ரசிகர்களுக்கு சினிமாவில் ஒரு கலைஞனை பிடித்துவிட்டால் அவர்கள் பாதை நன்றாக இருக்க வேண்டும் என இவர்களே வேண்டுவார்கள்.
அப்படி ஆரம்பத்தில் இருந்து சில நல்ல படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் லிங்குசாமி. ஆனால் இடையில் இவரது டிராக் கொஞ்சம் மாற தொடர்ந்து படங்கள் இயக்குவது இல்லை.
இவர் நன்றாக வந்திருக்க வேண்டிய ஒரு இயக்குனர் என ரசிகர்களே நினைத்துள்ளார்கள்.
சரி அப்படி லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து ஹிட்டடித்த சில சிறந்த படங்களை பற்றி காண்போம்.
ஆனந்தம் (2001)
லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ஷ்யாம் கணேஷ், ரம்பா, சினேகா என பலர் நடிக்க வெளியாகி இருந்த திரைப்படம் ஆனந்தம்.
திருப்பதி குடும்பம் என்று ஊரே மரியாதையோடு அழைக்கும் கூட்டுக் குடும்பம் பற்றிய கதை. கூட்டுக் குடும்பத்தை மக்கள் மறந்த நிலையில் ஒரு அருமையான குடும்ப படமாக அமைந்தது.
ரன் (2002)
மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், அதுல் குல்கர்னி, ரகுவரன் மற்றும் அனுஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ரன். கல்லூரி படிப்பிற்காக சென்னை அக்கா வீட்டிற்கு வரும் மாதவன்.
அங்கு பேருந்தில் மீரா ஜாஸ்மினை பார்க்க காதலில் விழுகிறார், ஆனால் நாயகியின் அண்ணன் பெரிய ரவுடி. இதெல்லாம் வேண்டாம் தனது அண்ணன் ரவுடி என எவ்வளவோ மீரா ஜாஸ்மின் கூறியும் மாதவன் காதலில் இருந்து பின்வாங்குவதாக இல்லை.
ஒரு கட்டத்தில் அண்ணனை எதிர்க்கும் மாதவனின் தைரியம் பிடித்துப்போக மீராஜாஸ்மினும் காதலிக்க தொடங்குகிறார். இறுதியாக இருவரும் சேர்ந்தார்களா என்பதே இப்படத்தின் கதையாகும்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டைப் பெற்ற ரன் படம் மாதவனின் சினிமா கேரியரில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சண்டக்கோழி (2005)
விஷால் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கத்தில் விஷாலுடன் மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் என பலர் நடித்திருந்தனர்.
நண்டனின் தங்கை மீரா ஜாஸ்மின் மீது காதல் வயப்படுகிறார் விஷால். அவர்களது ஊரில் இருக்கும் போது ஒரு பிரச்சனை, பின் அதை முடித்துவிட்டு விஷால் தனது சொந்த ஊருக்கு செல்கிறார், அங்கு அவரது அப்பா ராஜ்கிரண் பெரிய ஆள்.
அந்த இடத்திற்கே சென்று ரவுடிகள் விஷாலை தீர்த்துகட்ட முடிவு செய்கிறார்கள். தனது அப்பா பெயரை கெடுக்காமல், எதிரிகளை எப்படி விரட்டியடிக்கிறார் விஷால் என்பது கதை.
பையா (2010)
இந்த படத்திற்கு எந்த ஒரு இன்ட்ரோவும் தர வேண்டியது இல்லை. கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான இப்படத்தின் கதை மக்களுக்கு அத்துபடி, அதேபோல் யுவன் ஷங்கர் ராஜா இசையும் படத்திற்கு தனி சிறப்பை தேர்த்துள்ளது.
லிங்குசாமி, கார்த்தி மற்றும் தமன்னா சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது.
வேட்டை (2012)
லிங்குசாமி இயக்கத்தில் அமைந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் வேட்டை. ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி என பலர் படத்தில் நடித்துள்ளனர்.
அண்ணன்-தம்பிகள், அப்பா இறப்பிற்கு பிறகு பெரியவருக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது, ஆனால் அவர் கொஞ்சம் பயப்படுபவர்.
ஆனால் தம்பி அப்படி இல்லை, எதற்கும் பயப்படாதவர். இதனால் அண்ணனுக்கு வரும் பிரச்சனைகள் சமாளிக்கிறார்.