தமிழ் சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்கள்! காலத்தால் அழியாத பாடல்கள் கொடுத்த கவிஞர்கள் ஸ்பெஷல்
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பாடல்கள் கொடுத்த பாடலாசியர்கள் பற்றிய ஸ்பெஷல் தொகுப்பு இதோ..
கண்ணதாசன்
8ம் வகுப்பு மட்டுமே படித்து, சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து, கஷ்டப்பட்டு பல வேலைகள் செய்து அதன் பின் ஒருவழியாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்த கண்ணதாசன் என்ற கவிஞனின் கற்பனையில் உதித்த பாடல்கள் தற்போதைய காலகட்டத்திலும் பல லட்சம் ரசிகர்களை கொண்டிருக்கிறது.
மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழி வண்ணமே, 'ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன', அதோ அந்த பறவை போல வாழ வேண்டும், அச்சம் என்பது மடமையடா... என கண்ணதாசன் வரிகளில் ஹிட் அடித்த பாடல்கள் மிக ஏராளம்.
தற்போதைய கவிஞர்களும் வியந்து பார்க்கும் அளவுக்கு சாதனைகள் செய்திருக்கும் 20ம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் பாடலாசிரியர் அவர். நான் நிரந்தரமானவன் அழிவதில்லை என அவர் எழுதிய வரிகள் அவருக்கே பொருத்தமாக இருக்கும்.
வாலி
வாலி 2013ம் வருடம் காலமானார் என்றாலும் அவரது பாடல்கள் தற்போதும் பேசப்படும் ஒன்றாகவே இருக்கின்றன. சிறு வயதில் இருந்தே தமிழ் மீது தீராத காதல் கொண்ட அவர் வானொலியில் பணியாற்றிய காலத்தில் நாடகங்கள் எழுதி இருக்கிறார். அதன் பின் சென்னைக்கு வந்து, வழக்கமான அவமானங்களை கடந்து நாகேஷ் மூலமாக ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்து பாடலாசிரியராக சினிமாவுக்குள் நுழைந்தார் அவர்.
அப்போது தொடங்கி தனது முதுமை காலத்திலும் அவர் பாடல்கள் எழுதுவதை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் எப்போதும் அவரை மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே தான் இருக்கும்.
வைரமுத்து
தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் சீனியர் பாடலாசிரியர் வைரமுத்து தான். அவரது கவித்துவ பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுவரை ஏழு முறை தேசிய விருதுகள் வாங்கி இருக்கிறார் என்பதே வைரமுத்து எந்த அளவுக்கு பாடல் வரிகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் என்பதற்க்கு சான்று.
நா.முத்துகுமார்
கண்ணதாசன், வாலி எல்லாம் அவரவர் காலத்தில் உச்சத்தில் இருந்தது போல தற்போதைய 2k கிட்ஸ் கூட ஏற்றுக்கொள்ளும்படி ரசிக்கும்படியான பாடல் வரிகளை எழுதியவர் நா.முத்துக்குமார்.
கண்மூடித் திறக்கும் போது கடவுள் எதிரே வந்ததுபோல..
தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தை அன்பின் முன்னே..
என நம்மை ஈர்த்த அவரது பாடல் வரிகளை பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட் வரும். 2016 அவர் உடல்நலக்குறைவால் காலமானார். ஆனால் அவரது பாடல்கள் இப்போதும் அவரது பேர் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
தாமரை
எதார்த்தமாக, கவித்துவமாக, ஆபாசம் இல்லாமல் நல்ல பாடல்கள் எழுதி புக்ழ்பெற்றவர் தாமரை. ஆண்கள் ஆதிக்கம் இருக்கும் துறையில் ஒரு பெண் பாடலாசிரியராக ஜெயித்தவர் அவர்.
தள்ளிப்போகாதே, மறுவார்த்தை பேசாதே, மன்னிப்பாயா, உனக்கென்ன வேணும் சொல்லு, கண்ணான கண்ணே போன்ற பாடல்கள் தாமரையின் குறிப்பிடத்தக்க பாடல்கள் ஆகும்.