எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் வெளிவந்த சிறந்த பாடல்கள்.. ஒரு சிறப்பு பார்வை
1952ல் இருந்து இன்று வரை தனது இசையில் பல தலைமுறையை தன்வசப்படுத்தி வைத்திருப்பவர் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன். இவருடைய இசையில் வெளிவந்த பல பாடல்கள் இன்றுள்ள தலைமுறையை முணுமுணுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி, தலைமுறை தாண்டி நீடித்து நிற்கும் எஸ்.எஸ்.வி அவர்களின் சிறந்த பாடல்கள் குறித்து பார்க்காவிருக்கும் தொகுப்பு தான் இந்த பட்டியல்.
எங்கேயும் எப்போதும்
கே. பாலசந்தர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் நினைத்தாலே இனிக்கும். இப்படத்தை இன்று வரை நினைவில் வைத்துக்கொள்ள முக்கிய காரணங்களில் ஒன்று எஸ்.எஸ்.வி அவர்களின் பாடலும் தான். அதிலும் குறிப்பாக எம்.எஸ். வி இசையில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் பாடலை மறக்கவே முடியாது.
வசந்தகால நதிகளிலே
ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்து கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மூன்று முடிச்சி. இப்படத்தின் மிகப்பெரிய திருப்பத்தில் இடம்பெற்ற பாடல் தான் வசந்தகால நதிகளிலே. இந்த பாடல் இன்றும் நம் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடிக்க காரணாம் அது, எம்.எஸ்.வி இசையில் உருவானது தான்.
அதோ அந்த பறவைபோல வாழவேண்டும்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என பல ஜான்பாங்கள் நடித்து 1965ல் வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்திற்கு எம்.எஸ்.வி மற்றும் டி. கே. ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்திருந்தார்கள். இப்படத்தில் இடம்பெற்ற அதோ அந்த பறவைபோல வாழவேண்டும் இன்றும் பல ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸாக உள்ளது.
நிலவு ஒரு பெண்ணாகி
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். இப்படத்தில் எம். எஸ். வி இசையில் இடப்பெற்ற நிலவு ஒரு பெண்ணாகி பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. அந்த காலகட்டத்தில் அனைவரும் தங்களது காதலியை நினைத்து பாடும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
அவளுக்கென்ன அழகிய முகம்
கே. பாலசந்தர் இயக்கத்தில் நாககேஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சர்வர் சுந்தரம். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக எம்.எஸ். வியின் பாடலும் அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் மாபெரும் அளவிற்கு வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
காமெடி நடிகையாக வலம் வந்த ஆர்த்தி கணேஷின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- நல்லா கலர்புல்லா இருக்கே