தமிழ் சினிமாவில் எம்.சரவணன் இயக்கிய சிறந்த படங்கள்
எம்.சரவணன்
ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் எம்.சரவணன்.
இவர் கடந்த 2009ம் ஆண்டு தெலுங்கில் ராம் நடிப்பில் கணேஷ் என்ற படத்தை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தார். பின் தமிழில் எங்கேயும் எப்போதும், வலியவன், ராங்கி, நாடு என சில படங்களே இயக்கியுள்ளார்.
இந்த பதிவில் நாம் எம்.சரவணன் இயக்கிய சிறந்த படங்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.
எங்கேயும் எப்போதும்
கடந்த 2011ம் ஆண்டு எம்.சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எங்கேயும் எப்போதும். ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
வாழ்க்கையில் மக்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயத்தை பற்றியும் இந்த படம் பேசியிருந்தது.
இவன் வேற மாதிரி
விக்ரம் பிரபு, சுர்பி, கணேஷ் வெங்கட்ராமன், வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் இவன் வேற மாதிரி.
தமிழில் படம் நல்ல ஹிட் அடிக்க கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிக்க Chakravyuha என்ற பெயரில் இப்படம் ரீமேக் ஆனது.
நாடு
2023ம் ஆண்டு சரவணன் இயக்க தர்ஷன், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் வெளியான படம். சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் உள்ளன.
மருத்துவமனை இருந்தும் மருத்துவ வசதி கிடைக்காத ஒரு மலைக்கிராமம் பற்றிய கதையாக இந்த படம் நாடு படம் இருந்தது.

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu
