தமிழ் சினிமாவின் சிறந்த ஆண் டப்பிங் கலைஞர்கள்.. ஒரு சிறப்பு பார்வை
தமிழ் சினிமாவை இத்தனை ஆண்டு காலம் இயக்கி வரும் பல கருவிகளில் ஒன்று டப்பிங். நடிகர், நடிகைகள் பேசும் வசங்கள் மக்களுக்கு பிடித்தவாறு கரெக்ட்டாக பேசி அசத்துபவர்களே டப்பிங் கலைஞர்கள். தமிழில் பேச தெரியாத நடிகர், நடிகைகளுக்கு இங்கிருக்கும் சிறந்த டப்பிங் கலைஞர்களை வைத்து டப்பிங் பேசவைப்பார்கள். தமிழ் படங்கள் மட்டுமின்றி ஹோலிவுட்டில் இருந்து தமிழில் வெளிவரும் படங்களுக்கும் டப்பிங் செய்து அசத்தும் டப்பிங் கலைஞர்கள் குறித்து காணவிற்கும் சிறப்பு தொகுப்பு தான், இந்த கட்டுரை.
பி. ரவி ஷங்கர்
தமிழில் நடிகராகவும், டப்பிங் கலைஞராகவும் வலம் வருபவர் பி. ரவி ஷங்கர். இவர் 1991ஆம் ஆண்டு வெளிவந்த வைதேகி வந்தாச்சு படத்தின் மூலம் தமிழில் டப்பிங் கலைஞராக அறிமுகமானார். அதன்பின், ஹானஸ்ட் ராஜ், பாட்ஷா, ஜுராசிக் பார்க், நரசிம்மா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசி அசத்தியிருக்கிறார் பி. ரவி ஷங்கர். மேலும், இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சேகர் பி. ஆர்
அஜித் நடித்து வெளிவந்த பவித்ரா படத்தில் அஜித்துக்கு டப்பிங் பேசி, தமிழில் டப்பிங் கலைஞராக அறிமுகமானவர் சேகர். இதன்பின், ஆனந்தம், குட்டி, பயணம், பாகுபலி, விவேகம், காஞ்சனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். மேலும், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்த அவெஞ்சர்ஸ், புஷ்பா, கே.ஜி.எப் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களுக்கும் சேகர் தான் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளிகுமார்
1986ஆம் ஆண்டு வெளிவந்த ஊமை விழிகள் படத்தில் அருண் பாண்டியனுக்கு டப்பிங் பேசி டப்பிங் கலைஞராக அறிமுகமானவர் முரளிகுமார். இதன்பின், சண்டக்கோழி, வேலாயுதம், 7ஆம் அறிவு உள்ளிட்ட பல படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். இவர் டப்பிங் பேசிய தமிழகத்தில் பெரிதளவில் ஹிட்டான கார்ட்டூன் சீரிஸ் ஜாக்கி ஜானின் சாகசங்கள். இதுமட்டுமல்லாமல், தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்த பைரேட்ஸ் ஆப் தி கரேபியன், ஸ்பைடர் மேன் 2, டைட்டானிக், அவெஞ்சர்ஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு முரளிகுமார் டப்பிங் பேசியுள்ளார்.
ராஜேந்திரன்
தமிழ் படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருபவர் ராஜேந்தரின். இவர் நடிகராக பிரபலனத்தை விட, டப்பிங் கலைஞராக தான் ரசிகர்கள் மத்தியில் அதிமாக பிரபலமானார். ஆம், இவர் பேசிய ஒரே ஒரு குரலுக்கு பல்லாயிரம் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆம், தமிழ் சினிமாவின் நிகரற்ற வில்லன் நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாசராவ். அவர் தமிழில் நடிக்கும் படங்களுக்கு டப்பிங் பேசும் ஒரு கலைஞர் ராஜேந்திரன் மட்டும் தான். குறிப்பாக சாமி படத்தில் அவருக்கு ராஜேந்திரன் டப்பிங்கில் பேசிய ஒவ்வொரு வசனமும் மிரட்டலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குடும்பத்துடன் குக் வித் கோமாளி புகழ்.. வெளிவந்த அழகிய புகைப்படம்