பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்கள்.. இதோ

By Dhiviyarajan Feb 27, 2024 03:00 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

in கட்டுரை
Report

வெங்கட் பிரபு படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி இப்போது டாப் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் பா ரஞ்சித்.

தற்போது இவர் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..

அட்டகத்தி

நடிகர் தினேஷ் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி கடந்த 2012 -ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா எனப் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர்.

ஹீரோ பேருந்தில் பார்க்கும் பெண்களிடமும் காதலை வெளிப்படுத்தும் ஆள். ஆனால் எல்லாக் காதலும் சொதப்பி விடுகின்றது. இப்படி படம் முழுக்க நகைச்சுவை தன்மையுடன் இருக்கும்.

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்கள்.. இதோ | Best Pa Ranjith Movies In Tamil

மெட்ராஸ்

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து பா ரஞ்சித் நடிகர் கார்த்தி உடன் கூட்டணி வைத்து இருந்தார். காதல், அரசியல், நட்பு என்ற மிக்ஸிங்கில் உருவான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது சந்தோஷ் நாராயணின் இசை. சும்மா பட்டையை கிளப்பி இருப்பார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்கள்.. இதோ | Best Pa Ranjith Movies In Tamil

காலா

மும்பையின் மையப்பகுதியான தாராவியில் வாழும் தமிழர்களுக்கு நடக்கம் பிரச்சனையை மையமாக காலா திரைப்படம் உருவாகி இருக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - பா ரஞ்சித் காம்போவில் வெளிவந்த இந்த படத்திற்கு வசூல் ரீதியாக வெற்றியை பெறவில்லை என்றாலும், நல்ல விமர்சனமே கொடுத்து இருந்தனர்.

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்கள்.. இதோ | Best Pa Ranjith Movies In Tamil

சார்பட்டா பரம்பரை

பா. ரஞ்சித் இயக்கத்தில் பாக்சிங் கதைக்களத்தில் உருவான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

பாக்சிங், அரசியல் குறித்து இப்படத்தில் அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் ரஞ்சித். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இப்படம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.  

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்கள்.. இதோ | Best Pa Ranjith Movies In Tamil

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US