மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட சிறந்த தமிழ் படங்கள்!
ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால், அதே கதையை உடனே மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்வது வாடிக்கையான ஒன்று தான்.
அப்படி தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் ஆகி அதன் பின் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட சிறந்த படங்களை பற்றி பார்க்கலாம்.
கஜினி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி சூர்யா, அசின் நடித்து இருந்த இந்த படம் தமிழில் பெரிய ஹிட் ஆனது. அதன் பின் ஹிந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அமீர் கான் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் தான் ஹிந்தியிலும் இயக்கி இருந்தார். அங்கும் அந்த கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.
தனி ஒருவன்
தமிழில் ஜெயம் ரவி - அரவிந்த் சாமி கூட்டணியில் பெரிய ஹிட் ஆன படம் தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கி இருந்த இந்த படத்தை அதன் பின் தெலுங்கில் Dhruva என்ற பெயரில் ரீமேக் செய்தனர்.
அதில் ராம் சரண் ஹீரோவாக நடித்து இருந்தார். தெலுங்கிலும் அரவிந்த் சாமி தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளவந்தான்
கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கமல் எழுதிய தாயம் நாவல் அடிப்படையில் தான் இந்த படம் உருவாக்கப்பட்டது.
அதன் பின் 2003ல் ஹாலிவுட் இயக்குனர் Quentin Tarantino உருவாக்கிய Kill Bill: Volume 1ல் இடம்பெற்ற anime action sequence ஆளவந்தான் படத்தை inspire ஆகி எடுக்கப்பட்டது தான்.
அதை Quentin Tarantinoவும் ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டிருந்தார்.