பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கிய சிறந்த திரைப்படங்கள்..
ராஜமௌலி
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இன்று உலகளவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் திரையுலகில் கடந்த 23 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். இந்நிலையில் ராஜமௌலி இயக்கிய சிறந்த திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
சிறந்த திரைப்படங்கள்
1. பாகுபலி 1 & 2
வரலாற்று கதையம்சத்தில் உருவான பாகுபலி திரைப்படத்தை இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு இயக்கியிருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். தென்னிந்திய அளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாகவும் பாகுபலி 2 இடம்பெற்றுள்ளது.
2. நான் ஈ
நடிகர்களை வைத்து மட்டும் தான் மாஸ் காட்ட முடியும் என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு ஈ-யை வைத்து கூட மாஸ் காட்டலாம் என நிரூபித்தவர் ராஜமௌலி. கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இப்படத்தில் சமந்தா, நாணி, கிச்சா சுதீப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
3. மாவீரன்
ராம் சரண் - காஜல் அகர்வால் இணைந்து நடித்து ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. கடந்த ஜென்மத்தில் பிரிந்த காதல் எப்படி தற்போது ஒன்று சேர போகிறது என்ற கதைக்களத்தை சுவாரஸ்யமாக திரையில் காட்டியிருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி.
4. விக்ரமகுடு
தெலுங்கில் வெளிவந்த இப்படத்தின் ரவி தேஜா ஹீரோவாக நடித்திருந்தனர். இப்படத்தை தமிழில் சிறுத்தை என்ற தலைப்பில் ரீமேக் செய்திருந்தனர். தமிழில் மட்டுமின்றி இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ராஜமௌலியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று.
5. ஆர்.ஆர்.ஆர்
மல்டி ஸ்டாரர் படங்கள் பண்ணுவதில் ராஜமௌலியை அடித்துக்கொள்ள முடியாது என்பதன் சான்று தான் ஆர்.ஆர்.ஆர். ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்கும் இடையே ராஜமௌலி வைத்த காட்சிகள் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.தென்னிந்திய அளவில் அதிகம் வசூல் செய்த நம்பர் 1 என்ற பெருமையை பாகுபலி 2 பெற்றது. அதை தொடர்ந்து தென்னிந்திய அளவில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாக ஆர்.ஆர். ஆர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.