தமிழில் வெளிவந்த சிறந்த சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த சிறந்த Sci-Fi திரைப்படங்கள் குறித்து இந்த பட்டியலில் பார்க்கலாம் வாங்க.
எந்திரன்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 2010ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எந்திரன். தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து திரைப்படமாக எந்திரன் அமைந்தது. ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையக்கை, ஹீரோவாகவும் மறுபக்கம் வில்லனாகவும் கலக்கி இருந்தார் ரஜினிகாந்த்.
இன்று நேற்று நாளை
டைம் ட்ராவல் படம் என்றாலே ஹாலிவுட் தான் என்று சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில், தமிழில் அதை விட சிறப்பான தரமான டைம் ட்ராவல் படத்தை வழங்கினார் இயக்குநர் ரவிக்குமார். 2015ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் என பலரும் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழ் சினிமாவில் வெளிவந்த தலைசிறந்த படங்களில் இதுவும் ஒன்றாகும்.
24
ஹாலிவுட் தரத்திற்கு சற்றும் குறைவு இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் 24. இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் உருவான இப்படம் 2016ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் சூர்யாவுடன். அவருடன் சமந்தா, சரண்யா பொன்வண்ணன், நித்யா மேனன் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மாநாடு
கமர்ஷியலாகவும், அதே சமயம் டெக்னீகளாகவும் இப்படியொரு படத்தை கொடுக்க முடியுமா என அனைவரும் கேள்வி எழுப்பிய நிலையில், முடியும் டா என செஞ்சி காட்டியவர் இயக்குநர் வெங்கட் பிரபு. 2021ம் ஆண்டு தரமான திரைக்கதையில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் மாநாடு. சிம்புவின் கம் பேக் திரைப்படமாக இது அமைந்தது. மேலும் எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றது. யுவன் இப்படத்திற்கு இசையமைக்க கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் என பலரும் நடித்திருந்தனர்.
பிளாக்
இது தமிழ் திரைப்படமா இல்லை ஹாலிவுட் திரைப்படமா என அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய படம்தான் பிளாக். கடந்த 2024ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தை இயக்குநர் கே.ஜி. பாலசுப்பிரமணி இயக்கியிருந்தார். ஜீவா, பிரியா பவானி ஷங்கர், விவேக் பிரசன்னா, ஷா ரா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
அயலான்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து ஜாலியான தமிழ் Sci-Fi திரைப்படம் அயலான். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இப்படம் உருவானது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், இஷா கோபிகர் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
2.0
2010ம் ஆண்டு வெளிவந்த எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 வெளிவந்தது. ஷங்கர் - ரஜினி - அக்ஷய் குமார் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனால், வசூலில் பட்டையை கிளப்பியது. மேலும் CG ஒர்க் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மார்க் ஆண்டனி
டைம் ட்ராவல் படத்தில் இவ்வளவு கலாட்டாவும் நகைச்சுவையும் செய்ய முடியுமா என்கிற கேள்விக்கு பதில் கொடுத்த படம் மார்க் ஆண்டனி. ஒரே ஒரு போனை வைத்துக்கொண்ட எஸ்.ஜே. சூர்யா அப்பாவாகவும், மகனவும் அடிக்கும் அரட்டை, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடித்த விஷால், சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
டிக் டிக் டிக்
தமிழ் சினிமாவில் முதல் முறையாக உருவான Space திரைப்படம் டிக் டிக் டிக். இயக்குநர் சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரவி மோகன், ரமேஷ் திலக், நிவேதா பெத்துராஜ், அர்ஜுனன், ஜெய பிரகாஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் ரவி மோகனின் மூத்த மகன் நடிகராக அறிமுகமானார்.
அடியே
மார்வெல் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த alternate universe என்கிற கதைக்களத்தை மையமாக வைத்து தமிழில் உருவான திரைப்படம் அடியே. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ், கௌரி கிஷன், வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் என பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu

மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா? IBC Tamilnadu
