ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிறந்த திரைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் தான் ஷங்கர். இவருடைய படங்கள் பிரமாண்டம், சமூக கருத்துக்கள், காதல் என எல்லாமே சரி அளவில் இருக்கும்.
தற்போது இவருடைய இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஜென்டில்மென்
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993 -ம் ஆண்டு ஜென்டில்மென் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் மதுபாலா ஹீரோயினாக நடித்திருப்பார். மேலும் முக்கியமான ரோலில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஜென்டல்மென் படம் வெளியாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதல்வன்
நடிகர் அர்ஜுன் மற்றும் ரகுவரன் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் தான் முதல்வன். ஒரு நாள் முதல்வன் என்ற கான்செப்டில் இவர் எடுத்த படம் பட்டி தொட்டி எங்கும் வெற்றி அடைந்தது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான்.
இந்தியன்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்புக்களில் ஒன்றாக இருப்பது ஷங்கரின் இந்தியன் திரைப்படம். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில் பல புதுவித தொழில்நுட்பங்கள் மூலம் படம் தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகள் கழித்து தற்போது உருவாகிவருகிறது.
சிவாஜி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் 2007ல் வந்து பெரிய ஹிட் ஆன திரைப்படம் சிவாஜி. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்தது. ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து இருந்தனர். மேலும் வில்லன் ஆதிசேஷன் ரோலில் நடித்து சுமன் மிரட்டி இருப்பார். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்களில் சிவாஜி படமும் ஒன்று.
எந்திரன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்த திரைப்படம் தான் எந்திரன். உலகளவில் தென்னிந்திய சினிமாவின் நிலையை காட்டிய படங்களில் எந்திரன் ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு எந்திரன் திரைப்படம் வெளியானது. இந்தியாவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றது.