இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வெளிவந்த சிறந்த பாடல்கள்.. ஒரு சிறப்பு தொகுப்பு
தமிழ் சினிமாவில் 90ஸ் 2000 வரை அனைவருக்கும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த் தேவா. இவர் இசையில் வெளிவந்த பல பாடல்கள் இன்றுள்ள இளைஞர்களை கூட சுண்டி இழுக்கிறது. இப்படி காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை கொடுத்துள்ள ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வெளிவந்த சிறந்த பாடல்கள் குறித்து பார்க்காவிற்கும் தொகுப்பு தான் இந்த பட்டியல்.
நீயே நீயே
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நதியா, அசின் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் எம். குமரன் S/O ஆப் மகாலக்ஷ்மி. இப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக அம்மா, மகன் பாசத்தை குறித்து இடம்பெற்றிருந்த நீயே நீயே பாடல் மாபெரும் வெற்றியை படத்திற்கு தேடி தந்தது.
உசிலம்பட்டி சந்தையிலே
ஜீவா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தெனாவட்டு. இப்படத்தில் இடம்பெற்று இளைஞர்களை துள்ளி குதித்து ஆடவைத்த பாடல் உசிலம்பட்டி சந்தையிலே. ஸ்ரீகாந்த் தேவாவின் இசை பயணத்தில் மிகமுக்கியமான பாடல்களில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அட என்னாத்த சொல்லவேணுங்கோ
பேரரசு இயக்கத்தில் தளபதி விஜய், அசின் இணைந்து நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவகாசி. இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணங்களில் ஒன்றும் ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள். ஆம், அதிலும் குறிப்பாக விஜய், அசின் இருவரும் நடனத்தில் கலக்கிய அட என்னாத்த சொல்லவேணுங்கோ பாடல் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் தேரு பக்கம் வாடி
மீண்டும் பேரரசு இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பழனி. இப்படத்தில் பரத் மற்றும் காஜல் அகர்வால் இருவரும் இணைந்து நடனத்தில் பட்டையை கிளப்பிய பாடல் தான், திருவாரூர் தேரு பக்கம் வாடி. இப்பாடல் வெளிவந்த சமயத்தில் ஒலிக்காத இடமேயில்லை என்று தான் சொல்லவேண்டும்.
போட்டு தாக்கு
சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் குத்து. இப்படத்தில் இடம்பெற்று பாடல் தான் போட்டு தாக்கு. இன்றும் பல நடன நிகழ்ச்சிகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வெளிவந்து ரசிகர்களை குத்தாட்டம் ஆட வைத்த சூப்பர்ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்றாகும்..
பல வருடங்களுக்கு பிறகு ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் !