கலகலப்பான படங்களின் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய சிறந்த படங்கள்
சுந்தர் சி
தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்.
சிலர் காதல், காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் எல்லா விதமான கதைகளை இயக்குவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
இப்போது கௌதம் மேனன் எடுத்தால் நெஞ்சை பிச்சுக்கொண்டு போகும் அளவிற்கு காதல் படங்கள் எடுப்பார், வெற்றிமாறன் மிகவும் எதார்த்தமான, நாவலை தழுவிய கதைகளை இயக்குவார், மணிரத்னம் ஒருவிதமான டைப் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அப்படி தமிழ் சினிமாவில் 1980ம் ஆண்டு நடிகராக நுழைந்து காமெடி படங்கள் அதிகம் இயக்கி கலக்கியவர் தான் சுந்தர். சி.
1995ம் ஆண்டு முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து காமெடி நடிகர்களுடன் பணியாற்றிய இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சரி அவர் இயக்கத்தில் இன்றும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படங்களை பார்ப்போம்.
முறைமாமன் (1995)
ஜெயராம், குஷ்பு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் நகைச்சுவை கலந்து குடும்ப திரைக்கதையின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.
அருணாச்சலம் (1997)
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம். வித்தியாசமான கதைகளத்தில் படத்தை இயக்கி ரஜினியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது.
உள்ளத்தை அள்ளித்தா (1996)
இந்த படத்தில் இடம்பெற்ற அழகிய லைலா பாடல் இப்போதும் மக்கள் மனதில் ஒலிக்கும். நகைச்சுவை மையமாக கொண்டு குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. சுந்தர்.சி-கவுண்டமணி கூட்டணியில் வெளிவந்த இப்படம் செம வெற்றிப் படமாக அமைந்தது.
அன்பே சிவம் (2003)
காமெடி ஜானரை தாண்டி அழுத்தமான திரைக்கதையில் மக்களை சிந்திக்க வைக்கும் படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும், சுந்தர்.சி திரைவாழ்வில் முக்கிய படமாக அமைந்தது.
வின்னர் (2003)
பிரசாந்த், கிரண், வடிவேலு, விஜயகுமார் என பலர் நடிக்க வெளியான படம். இந்த படம் கதையை தாண்டி நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகள் பெரிதும் ரீச் ஆனது, ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
கலகலப்பு (2012)
விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் என நடிக்க ஒட்டுமொத்த படமும் காமெடியாக உருவானது. 2ம் பாகம் வந்துவிட்டது ஆனாலும் மக்களுக்கு முதல் பாகம் தான் மிகவும் பேவரெட்டாக உள்ளது.