சமூக அக்கறை மிகுந்த கமர்ஷியல் பட இயக்குனர் சுசீந்திரனின் சிறந்த படங்கள்

By Yathrika Feb 26, 2024 01:30 PM GMT
Report

சுசீந்திரன்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சில சூப்பர் ஹிட் படங்களையும் சமூகப் பிரச்சனைகளை பேசும் படங்களையும் கொடுத்து இப்போது உள்ள முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குனர் சுசீந்திரன்.

சபா கைலாஷ், எழில் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்ற தொடங்கி 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர் முதன்முறையாக வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

அதன்பிறகு அவர் இயக்கிய பல படங்கள் ஹிட் லிஸ்டில் அமைந்துள்ளது. சரி அவர் இயக்கிய படங்களில் சிறந்த படங்களின் விவரங்களை காண்போம்.

சமூக அக்கறை மிகுந்த கமர்ஷியல் பட இயக்குனர் சுசீந்திரனின் சிறந்த படங்கள் | Best Suseenthiran Movies In Tamil

வெண்ணிலா கபடி குழு (2009)

கபடி விளையாட்டை மையமாக கொண்டு கலகலப்பான திரைக்கதையுடன் கிராமங்களில் இருக்கும் சாதி அரசியலைத் தோலுரித்தது இந்த படம்.

விஷ்ணு விஷால் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார், அதேபோல் சூர் இந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா காட்சிகள் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

சமூக அக்கறை மிகுந்த கமர்ஷியல் பட இயக்குனர் சுசீந்திரனின் சிறந்த படங்கள் | Best Suseenthiran Movies In Tamil

நான் மகான் அல்ல (2010)

கார்த்தி-காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க 2010ம் ஆண்டு வெளியான படம் நான் மகான் அல்ல. ஜாலியாக, காதலித்து சுற்றும் கார்த்தி வாழ்க்கையில் அவரது அப்பாவின் உயிரிழப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

தனது அப்பாவின் இறப்பிற்கு காரணமானவர்களை மகன் பழிவாங்கும் கதை இது. படத்தை தாண்டி யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல ஹிட்.

சமூக அக்கறை மிகுந்த கமர்ஷியல் பட இயக்குனர் சுசீந்திரனின் சிறந்த படங்கள் | Best Suseenthiran Movies In Tamil

பாண்டிய நாடு (2013)

விஷால், லட்சுமி மேனன், சூரி, விக்ராந்த் என பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கிய படம் பாண்டிய நாடு. டி.இமான் இசையமைப்பில் வெளியான இப்படம் ரூ. 50 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

ஆக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் கதை என்னவென்றால் அண்ணனை கொன்றவர்களை நாயகன் பழிவாங்குவது தான்.

சமூக அக்கறை மிகுந்த கமர்ஷியல் பட இயக்குனர் சுசீந்திரனின் சிறந்த படங்கள் | Best Suseenthiran Movies In Tamil

ஜீவா (2014)

விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்த இப்படத்தின் கதை என்னவென்றால் குழந்தை பருவத்திலிருந்தே தாயில்லாத ஜீவா கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தி வளர்கிறார்.

இருப்பினும் அவரது காதல் வாழ்க்கை முதல் அணித் தேர்வு அரசியல் வரை பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார். விளையாட்டில் நிஜத்தில் நடக்கும் அரசியலை காட்டிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

சமூக அக்கறை மிகுந்த கமர்ஷியல் பட இயக்குனர் சுசீந்திரனின் சிறந்த படங்கள் | Best Suseenthiran Movies In Tamil

அழகர்சாமியின் குதிரை (2011)

வெண்ணிலா கபடி குழு’வில் நகைச்சுவை துணை நடிகராக நடித்த அப்புகுட்டி இதில் கதையின் நாயகனாக நடித்தார். இளையராஜா இசையமைத்தார்.

ஒரு குதிரைக்காரரை முன்வைத்து கிராமத்து வாழ்க்கையைப் பக்குவத்தோடும் பகடியோடும் பதிவு செய்த இந்தப் படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.

சமூக அக்கறை மிகுந்த கமர்ஷியல் பட இயக்குனர் சுசீந்திரனின் சிறந்த படங்கள் | Best Suseenthiran Movies In Tamil

ஆதலால் காதல் செய்வீர் (2013)

இளம் நடிகர்களை வைத்து நகர்ப்புற இளைஞர்களின் எதிர்பாலின ஈர்ப்பு அளவுக்கு மீறிப் போவதால் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நேரும் சிக்கல்களையும் சமூக அவலங்களையும் இந்த படத்தில் சுசீந்திரன் காட்டியிருப்பார்.

வணிகரீதியாக வெற்றி பெற்றதோடு விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது.

சமூக அக்கறை மிகுந்த கமர்ஷியல் பட இயக்குனர் சுசீந்திரனின் சிறந்த படங்கள் | Best Suseenthiran Movies In Tamil

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US