நாவல்கள் அடிப்படையில் உருவான சிறந்த தமிழ் திரைப்படங்கள்! ஸ்பெஷல் தொகுப்பு
தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம் இருக்கிறது என்கிற கருத்து சமீப காலமாக அதிகம் பேசப்படும் ஒன்றாகிவிட்டது. அதனால் புதுப்புது கதைகளை யோசிப்பதை தாண்டி ஏற்கனவே மக்களை கவர்ந்த நாவல்களை வைத்து படமாக எடுக்கும் போக்கு அதிகரித்து இருக்கிறது.
அப்படி புத்தகங்களின் அடிப்படையில் உருவான சிறந்த தமிழ் படங்களை பற்றி பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன்
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் அடிப்படையில் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கிய படம் பொன்னியின் செல்வன்.
விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ரவி மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.
அசுரன்
பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலின் அடிப்படையில் உருவான படம் அசுரன். பல தசாப்தங்களுக்கு முன்பு வந்த நாவல் அது, ஆனால் தற்போதும் சமூகத்தில் அதே சாதிய வன்கொடுமைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டியது.
தனுஷ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அதிகம் பேசப்பட்ட ஒன்று.
முள்ளும் மலரும்
உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் என்ற நாவலின் கதையை கொண்டு 1978ல் வெளிவந்த படம் முள்ளும் மலரும். அதில் ரஜினி ஹீரோவாக நடித்து இருப்பார். ‘கெட்டப்பய சார் இந்த காளி..’ என்ற வசனம் இப்போதும் பேமஸ் தான்.
தற்போது ரசிகர்கள் கொண்டாடும் காவியமாக இந்த படம் இருந்து வருகிறது.
ஆளவந்தான்
கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற நாவல் அடிப்படையில் உருவான படம் ஆழவந்தான். பாஷா பட புகழ் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி இருந்தாலும் இதன் கதை, திரைக்கதை கமல்ஹாசனுடையது தான்.
கமல் இரட்டை வேடங்களில் நடித்து இருந்த இந்த படம் 2001ல் வெளியாகி இருந்தது.