அமேசான் ப்ரைமில் இந்த தமிழ் படங்களை எல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க
ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வரிசையாக பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது நீங்கள் அமேசானில் என்ன படம் பார்க்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தால் கீழே இருக்கும் படங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டீர்களா என முதலில் பாருங்கள்.
அப்படி நீங்கள் மிஸ் செய்யக்கூடாத சில சமீபத்திய படங்களின் லிஸ்ட் இதோ .
ஜெய் பீம்
காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போன கணவனை கண்டுபிடிக்க போராடும் ஒரு பழங்குடிப் பெண் செங்கேணியின் போராட்டம் தான் இந்த ‘ஜெய் பீம்’.
இருளர் சமூகத்தை சேர்ந்த ராஜாகண்ணு பல வேலைகள் செய்து குடும்பத்தை கஷ்டப்பட்டு காப்பற்றி கொண்டு, நல்ல வீடு கட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்து வருகிறார். அவர் பாம்பு பிடிக்க சென்ற இடத்தில் நகையை திருடிவிட்டார் என புகார் வர மொத்த குடும்பத்தியும் சித்ரவதை செய்கிறது போலீஸ். அதன் பின் ராஜாக்கண்ணு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து காணாமல் போக அவரை மீட்க மனைவியின் சட்ட போராட்டம் தான் மீதி படம்.
ஜெய் பீம் அமேசன் ப்ரைம் லிங்க்
சார்பட்டா பரம்பரை
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை வடசென்னை பகுதியில் பிரபலமாக இருக்கும் பாக்சிங் மற்றும் அதனை உயிராக கொண்டிருக்கும் இரண்டு குழுவினர் இடையே நடக்கும் பிரச்சனை தான் கதை.
சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை இந்த இரண்டு பரம்பரையும் கால காலமாக மோதி வருகிறது. ஆரம்பத்தில் கை ஓங்கி நின்று சார்பட்டா பரம்பரை காலப்போக்கில் இடியாப்ப பரம்பரையிடம் தோற்றுக்கொண்டே வருகிறது. ஒருநாள் பசுபதி கடைசியாக ஒரு சண்டை இதில் நான் தோற்றால், சார்பட்டா பரம்பரை இனி பாக்ஸிங்கே போடாது என சவால் விடுகிறார். அவர் சவாலுக்குள் ஆர்யா எப்படி வந்தார், வந்து சார்பட்டா பரம்பரைக்காக வெற்றியை தேடி தந்தாரா என்பது மீதிக்கதை.
சார்பட்டா பரம்பரை அமேசான் ப்ரைம் லிங்க்
டுலெட்
சென்னையில் வாடகைக்கு இருப்பவர்கள், முன்பு இருந்தவர்கள் என வாடகைவாசிகள் படும் கஷ்டம் பற்றியது தான் இந்த டுலெட் படம்.
கணவன், மனைவி மற்றும் ஒரு குழந்தை என இருக்கும் சின்ன குடும்பம் சென்னையில் வாடகை வீடு தேடி அலைவது, வீட்டில் இருக்கும் சிக்கல்கள் என அனைத்தையும் உங்கள் கண் முன்னே கொண்டு வரும் இந்த படம்.
பரியேறும் பெருமாள்
தற்போதைய காலகட்டத்தில் கூட தமிழ்நாட்டில் இருக்கும் ஜாதி வேற்றுமைகள் பற்றி காட்டிய படம் இது.
திருநெல்வேலியில் இருக்கும் புளியங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த கதிர். சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். ஆங்கில அறிவு இல்லாததால் அவமானப்படுத்தப்படும் அவருக்கு ஹீரோயின் ஆனந்தி உதவி செய்கிறார். ஒருமுறை அனந்தி வீட்டில் நடக்கும் பங்க்ஷனுக்கு அவர் செல்ல, ஜாதி வெறி பிடித்தவர்கள் இவரை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார்கள்.
இப்படி ஜாதியால் வரும் சிக்கல்களை தாண்டி கதிர் படிப்பை முடித்தாரா, ஹீரோயினை கரம் பிடித்தாரா என்பது தான் படத்தின் கதை.
பரியேறும் பெறுமாள் அமேசான் ப்ரைம் லிங்க்
சூரரைப் போற்று
இந்திய ஏர்போர்ஸில் பணியாற்றும் நெடுமாறன் ராஜங்கம் அந்த வேலையை விட்டுவிட்டு தனியாக ஏர்லைன்ஸ் ஆரம்பிக்க முடிவெடுத்து அதற்காக படும் கஷ்டம் பற்றியது தான் இந்த சூரரைப் போற்று.
விமான நிறுவனம் ஆரம்பிப்பது இந்தியாவில் சுலபம் அல்ல என இந்த படம் உங்களுக்கு புரியவைக்கும்.
கர்ணன்
இந்த படம் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் பொடியன்குளம் என்ற கிராமத்தில் இருக்கும் கர்ணன் பற்றிய கதை. பேருந்து நின்று செல்வதில்லை என்கிற பிரச்சனை தொடங்கி பல அடிப்படை வசதிகள் இல்லாத ஊர். பேருந்து இல்லாததால் இந்த பிரச்சனை கலவரமாக மாறுகிறது. அது தொடர்பான விசாரணையில் வில்லன் போலீசின் ஈகோவால் பிரச்சனை பெரிதாகிறது.
ஹீரோ கர்ணன் இதை எல்லாம் சமாளித்தாரா என்பது தான் படத்தின் கதை.
அசுரன்
மேலே குறிப்பிட்ட படங்களை போலவே இந்த படத்தின் கதையும் ஜாதி பிரச்சனை பற்றியது தான். தனது மகனை கொன்ற மேல்ஜாதிகாரர்களை எதுவும் செய்யாமல் விட்டுவிடுகிறார் தனுஷ், ஆனால் அவரது இன்னொரு மகன் அதற்காக பழிவாங்க செல்கிறார். அதில் அவர் ஜெயித்தாரா, தனுஷ் தன் இன்னொரு மகனை வில்லன்களிடம் இருந்து காந்தாரா என்பது தான் படத்தின் கதை.
பொன்மகள் வந்தாள்
ஒரு குழந்தைக்கு நடக்கும் அநீதி, அதற்காக குற்றம்சாட்டப்பட்ட ஒரு பெண் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஜோதிகாவின் கதாபாத்திரம், மோசமான செயல்களில் ஈடுபடும் பெரிய இடத்து பையன்கள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வருவது தான் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் கதை.
பொன்மகள் வந்தாள் அமேசான் லிங்க்
தீரன் அதிகாரம் ஒன்று
வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பல கொடூரமான கொலை கொள்ளை சம்பங்கள் செய்த கும்பலை பிடிக்க கார்த்தி எடுக்கும் முயற்சிகள் பற்றியது தான் தீரன் அதிகாரம் ஒன்று.
ஹெச் வினோத் இயக்கிய இந்த படம் தமிழ் சினிமாவில் முக்கிய crime thriller படங்களில் ஒன்று.
தீரன் அதிகாரம் ஒன்று அமேசான் லிங்க்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
