ஹாட்ஸ்டாரின் சிறந்த தமிழ் படங்கள்! மிஸ் பண்ணாம பாருங்க
ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ள சிறந்த தமிழ் படங்களின் தொகுப்பு இதோ..
வடசென்னை
தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்கள் கொடுத்து வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த வடசென்னை படம் தியேட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்று. ஹாட்ஸ்டாரில் மிஸ் செய்யக்கூடாத படங்களை பட்டியலிட்டால் அதில் வடசென்னை நிச்சயம் முதலிடத்தில் இருக்கும்.
வடசென்னை பகுதியில் நடக்கும் இந்த கதையில் கேரம் போர்டு பிளேயர் தனுஷ் சந்தர்ப்பத்தால் கேங்ஸ்டராக உருவாவானால் என்ன நடக்கும் என்பது தான் காட்டப்பட்டு இருக்கும்.
சதுரங்க வேட்டை
இந்த உலகத்தில் எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள், பணத்தை திருட்டு தனமாக இப்படியும் சம்பாதிக்கிறார்களா என வியக்க வைக்கும் அளவுக்கு இந்த படத்தின் கதை இருக்கும்.
நட்டி என்கிற நட்ராஜ் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி இருந்தார். தீரன், வலிமை படங்களை பின்னாளில் இயக்கியவர் தான் அவர்.
கைதி
சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் டில்லி சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு போலீஸ் மிஷனுக்குள் வருகிறார். போலீஸ் அதிகாரிகளுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு போதைப்பொருளை மீட்க நினைக்கும் வில்லன் அர்ஜுன் தாஸ் உடன் அவர் நடத்தும் மோதல் தான் 'கைதி'.
கோமாளி
16 வருடங்கள் கோமாவில் இருந்த ஹீரோ ஜெயம் ரவி, அதில் இருந்து மீண்டு வரும்போது நாட்டில் நாட்டில் நடந்திருக்கும் மாற்றத்தை பார்த்து ஆச்சர்யம் அடைகிறார். அவர் பள்ளி கால காதலியை தேடி செல்கிறார்.
தான் கோமாவுக்கு செல்ல காரணமான சம்பவம் மற்றும் அதற்கு காரணாமாக வில்லனை எப்படி பழிவாங்குகிறார் என்பது தான் கோமாளி கதை. என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் இல்லாத படம் அது.
நண்பன்
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா என பலர் நடித்து இருக்கும் இந்த படம் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக். இரண்டு நண்பர்கள் சேர்ந்த தங்கள் மூன்றாவது நண்பனை தேடி செல்வது தான் கதை. கல்லூரி கால நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே பயணிக்கும் அவர்களது பயணம் நம்மையும் நம் நினைவலைகளுக்குள் இழுத்து செல்லும்.
துப்பாக்கி
ராணுவத்தில் இருந்து விடுப்புக்கு ஒரு மாதம் வீட்டுக்கு திரும்பும் ஹீரோ அந்த நேரத்திலும் மும்பையில் தீவிரவாத செயலில் ஈடுபட திட்டமிடும் ஒரு பெரிய நெட்ஒர்க்கை எப்படி அழிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிகர்தண்டா
திரைப்பட கதை எழுதுவதற்காக ஒரு நிஜ கேங்ஸ்டரை பின்தொடர்ந்து செல்லும் ஹீரோ சித்தார்த் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அந்த ரௌடி தானே அந்த அப்படத்தில் ஹீரோவாக நடிப்பேன் என அடம்பிடிக்கிறார். இதை எப்படி அந்த இயக்குனர் சமாளித்தார் என்பது தான் படத்தின் மீதி கதை.
முண்டாசுப்பட்டி
போட்டோ எடுக்கவே பயப்படும் ஒரு கிராமம், அதில் போய் சிக்கிக்கொள்ளும் ஒரு போட்டோகிராபர் தான் படத்தின் ஒன்லைன். பீரியட் படம், காமெடிக்கு பஞ்சம் இல்லாத கதை என உங்களை நிச்சயம் சிரிக்க வைக்கும்.
காக்கா முட்டை
குப்பத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத குடும்பத்தில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் எப்படியாவது பீட்சா சாப்பிட வேண்டும் என நினைகிறார்கள். அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை.
எதிர்நீச்சல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த இந்த படம் அவரது கேரியரில் முக்கியமான ஒன்று. தனது பெயர் மற்றவர்கள் சிரிக்கும் வகையில் இருக்கிறது என சொல்லி அதை ஸ்டைலாக மாற்றிக்கொள்ளும் ஹீரோ, அதற்கு பிறகு ஒருகட்டத்தில் சொல்லும் சின்ன பொய் பெரிய பிரச்சனையாகிறது. அதன் பின் அந்த பெயருக்காக அவர் மாரத்தானில் ஜெயிக்க முடிவெடுத்து ஜெயிக்க நினைக்கிறார். அதை செய்ய முடிந்ததா இல்லையா என்பது தான் கதை.
இந்த படங்கள் மட்டுமின்றி ஹாட்ஸ்டாரில் ஓகே கண்மனி, மூக்குத்தி அம்மன், ராஜா ராணி, விஸ்வரூபம், சிறுத்தை, எதிர்நீச்சல், மெட்ராஸ், மாரி, குள்ளநரி கூட்டம், ஆரண்ய காண்டம், நகரம் மறுபக்கம், பிசாசு போன்ற படங்களையும் நேரம் இருந்தால் தவறாமல் பாருங்கள்.