ஜியோ சினிமாவின் சிறந்த தமிழ் திரைப்படங்கள்..
இந்தியளவில் மிகவும் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்று ஜியோ சினிமா. இதில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் என அணைத்து மொழி படங்களும் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில், தமிழில் ஒளிபரப்பாகி வரும் சிறந்த தமிழ் படங்கள் குறித்து தான், கட்டுரையாக நாம் தற்போது பார்க்கவிருக்கிறோம்.
வேலையில்லா பட்டதாரி
வேல்ராஜ் இயக்கத்தில் முதல் முறையாக தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. தனுஷின் 25 வைத்து படமான வேலையில்லா பட்டதாரி, ப்ளாக் பஸ்டர் வெற்றியை தனுஷுக்கு பல ஆண்டுகள் கழித்து தேடி தந்தது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். வேலையில்லாமல் சமுதாயத்தில் அவமானப்படும் இன்ஜினீயர்களை மையமாகக்கொண்டு உருவான இப்படத்தை, ரசிகர்கள் தலைமேல் வைத்து கொண்டாடினார்கள். இப்படம் தற்போது ஜியோ சினிமாவில் பெரிதிளவில் பார்க்கப்பட்டு வருகிறது.
96
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முதன் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 96. காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியை இருவருக்கும் தேடி தந்தது. பிரேம் குமார் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தததோ, அதே அளவிற்கு இப்படத்தில் இசைக்கும் முக்கியத்துவம் அதிகமாவே இருந்தது. படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் கோவிந்த் வசந்தாவின் இசை என்று கூட கூறலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவைத்து அவரின் இசையும், பிரேமின் இயக்கமும். பல வருடங்களாக சரியான கம் பேக்கிற்காக காத்திருந்த நடிகை திரிஷாவிற்கும் இப்படம் மீண்டும் அவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தேடி தந்தது. தற்போது இப்படம், ஜியோ சினிமாவில் தமிழ் ரொமான்ஸ் எனும் பிரிவில் பட்டையை கிளப்பி வருகிறது.
காஞ்சனா
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் முனி 2 காஞ்சனா. திகில் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், இப்படம் வசூலில் ரூ. 100 கோடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் திகில் கலந்த காமெடி படங்களாக வெளிவங்கியது. இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து கோவை சரளா, சரத்குமார், ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தற்போது இப்படம் ஜியோ சினிமாவில் ஹோரர் பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது.
சிங்கம் 2
சிங்கம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சிங்கம் 2. போலீஸ் பின்புலத்தை கொண்டு, கமர்ஷியல் மாஸ் என்டர்டைனராக உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே சிங்கம் 2 தான், பல கோடிகளை பாக்ஸ் ஆபிசில் கலெக்ட் செய்த படமாக அமைந்தது. சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா, ராதாரவி, ஹன்சிகா, ரஹ்மான், உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஜியோ சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் ஒன்றாக சிங்கம் 2வும் திகழ்ந்து வருகிறது.
எந்திரன்
ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் இரண்டாவது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் எந்திரன். முதல் முறையாக நவீன தொழில்நுட்பங்களை கொண்டு தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த, எந்திரன் படம் அதை விட இரண்டு மடங்கு அதிகமாக பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. முதல் முறையாக எந்திரமாக நடித்திருந்த ரஜினிக்கு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்தது. அதுமட்மின்றி ஒரு பக்கம் சிட்டியாகவும், சிட்டி 2.0 வில்லனாகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ், என பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில், தற்போது ஜியோ சினிமா தளத்தில் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வரும் திரைப்படங்களில் ஒன்றாக எந்திரன் கருதப்படுகிறது.
தளபதி 66 பட கதாநாயகிக்கு கோடிக்கணக்கில் சம்பளம்.. யார் அந்த நடிகை தெரியுமா