தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Friendship படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ

By Bhavya Jul 31, 2025 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த Friendship திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம். 

என்றென்றும் புன்னகை:

அஹ்மத் இயக்கத்தில் ஜீவா, வினய், சந்தானம், திரிஷா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து 2013 - ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம் தான் என்றென்றும் புன்னகை.

மூன்று நண்பர்களின் வாழ்க்கை, அவர்களது தொழில் மற்றும் காதல் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Friendship படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Friendship

பிரண்ட்ஸ்:

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பர் நாடகத் திரைப்படம் தான் பிரண்ட்ஸ். இப்படத்தில் விஜய் மற்றும் சூர்யா இருவருக்கும் இடையே உள்ள நட்பு, அதனால் ஏற்படும் மோதல் என இப்படம் வெளியான நேரத்தில் மாபெரும் ஹிட் ஆனது.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Friendship படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Friendship

நாடோடிகள்:

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா என பலர் நடித்துள்ள இப்படம் கடந்த 2009ம் ஆண்டு வெளியானது.

குடும்ப வாழ்க்கையும் நட்பையும் காதலையும் முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட படைப்பு தான் இப்படம். நட்பு சம்பந்தப்பட்ட படங்களில் இந்த படம் டாப்பில் இடம் பிடிக்கும்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Friendship படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Friendship

உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக வலம் வரும் சமந்தா.. ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்!

உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக வலம் வரும் சமந்தா.. ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்!

அண்ணாமலை:

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த அண்ணாமலை படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்து.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ நடிக்க தேவா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும், குறிப்பாக பின்னணி இசையும் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது. 

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Friendship படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Friendship

பாஸ் என்ற பாஸ்கரன்:

எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2010ல் வெளிவந்த திரைப்படம் பாஸ் என்ற பாஸ்கரன். காமெடி கலந்த ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ஆர்யா - சந்தானம் இணைந்து நடித்திருந்தனர்.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்க சுப்பு பஞ்சு அருணாச்சலம், லட்சுமி ராமகிருஷ்ணன், சித்ராலட்சுமணன், விஜயலக்ஷ்மி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Friendship படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Friendship

நண்பன்:

 ஷங்கர் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்து கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நண்பன்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா உள்ளிட்டோர் நண்பர்களாக நடித்திருந்தனர். மேலும் இலியானா கதாநாயகியாக நடிக்க சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Friendship படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Friendship

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US