சென்னையில் உள்ள பிரபலமான திரையரங்குகள்.. வாங்க பார்க்கலாம்
3 மணி நேரம் நம் அனைவரையும் நம்முடைய அனைத்து கவலைகளையும் மறக்கடிக்க செய்யும் விஷயம் திரைப்படம். அதை நாம் திருவிழா போல் கொண்டாடும் இடம் திரையரங்கம்.
அப்படி நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் திரையரங்கம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். சென்னையில் உள்ள பிரபலமான திரையரங்குகளை தற்போது பார்க்கலாம்..
சத்யம் சினிமாஸ்
சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான திரையரங்கங்களில் இதுவும் ஒன்று. 8, திருவிகா சாலை, பீட்டர்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னையில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது.
கமலா தியேட்டர்
ரசிகர்களால் கொண்டாடப்படும் திரையரங்களில் ஒன்று கமலா. 156, ஆர்காட் சாலை, வடபழனியில் அமைந்திருக்கும் கமலா திரையரங்கம் 1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. மேலும் இந்த திரையரங்கத்தில் இரண்டு ஸ்க்ரீன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி
சென்னையில் உள்ள பெரிய திரையரங்கங்களில் ஒன்று வெற்றி. இதில் 930 பேர் அமர்ந்து படம் பார்க்கும் அளவிற்கு வசதி இருக்கிறது. 511, கிராண்ட் சவுத்தன் டவர், Reserve Bank காலனி, குரோம்பேட், சென்னையில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது.
காசி தியேட்டர்
1984ல் சென்னையில் துவங்கப்பட்ட பிரபலமான திரையரங்கம் காசி. இன்று வரை வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கும் இந்த திரையரங்கம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான இடமாக இருக்கிறது. 100 அடி சாலை, காசி எஸ்டேட், அசோக் நகர், சென்னையில் காசி தியேட்டர் அமைந்துள்ளது.
ரோகினி சில்வர் ஸ்க்ரீன்ஸ்
Fans Fort என ரசிகர்களால் அழைக்கப்படும் திரையரங்கம் ரோகினி. உச்ச நட்சத்திரங்களின் படங்களின் FDFS காட்சியை இந்த திரையரங்கிள் பார்க்க தான் ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள். 141/2, பூந்தமல்லி உயர்நிலை சாலை, கோயம்பேடில் ரோகினி திரையரங்கம் அமைந்துள்ளது.