நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்.. இதோ!!
ஊட்டி
இயக்குனர்கள், காதல் காட்சி மற்றும் டூயட் சாங் எடுக்க வேண்டும் என்று யோசித்தால் அவர்கள் மனதில் வரும் முதல் லொகேஷன் ஊட்டி தான்.
ஷூட்டிங்க்கு பேர் போன ஊர்.. இருந்தாலும் ஊட்டியில் சில தியேட்டர் தான் இருக்கிறது. தற்போது அது தொடர்பாக பார்க்கலாம் வாங்க..
அசெம்பிளி தியேட்டர்
கடந்த 1901 -ம் ஆண்டு அசெம்பிளி தியேட்டர் நிறுவப்பட்டது. கார்டன் சாலை, அரசு தாவரவியல் பூங்காவிற்கு அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது. இந்த தியேட்டரில் பெரும்பாலும் ஆங்கில மொழித் திரைப்படங்களைக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
பழமையான இந்த தியேட்டர், கடந்த 2011 -ம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பின் 2015 -ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
கணபதி தியேட்டர்
ஊட்டியில் இருக்கும் பழமையான தியேட்டர்களில் ஒன்று தான் கணபதி தியேட்டர். இப்போது அந்த தியேட்டரில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு இருக்கிறதாம்.
கமர்ஷியல் ஸ்ட்ரீட், மாரியம்மன் கோவில் அருகே இந்த கணபதி தியேட்டர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.