திருச்சியில் உள்ள பிரபலமான திரையரங்கங்கள்.. இதோ
சினிமாவை அதிகமாக கொண்டாடப்படும் மாவட்டங்களில் முக்கியமான ஒன்று திருச்சி. ரசிகர்களால் சினிமாவை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் திருச்சிராப்பள்ளியில் இருக்கும் பிரபலமான 5 திரையரங்கம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்..
எல் ஏ சினிமாஸ் மாரிஸ்
மாரிஸ் தியேட்டர் வளாகம், Fort ஸ்டேஷன் Road, திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் தான் திருச்சியில் அதிகம் ஸ்க்ரீன்களை கொண்டுள்ளது. 5 ஸ்க்ரீன்களுடன் இயங்கி வரும் இந்த திரையரங்கத்தில் RGB Laser,4K projection and Dolby atmos sound system ஆகிய தொழில்நுட்பம் உள்ளது.
எல் ஏ சினிமாஸ் சோனா
திருச்சியில் மிகவும் பிரபலமான திரையரங்கமான எல் ஏ சினிமாஸ் சோனா, வில்லியம்ஸ் சாலை, மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. RGB Laser தொழில்நுட்பத்தில் இயங்கி வரும் இந்த திரையரங்கில் மொத்தம் 4 ஸ்க்ரீன்கள் உள்ளன.
மெகா ஸ்டார்
சாலை Road, திருச்சிராப்பள்ளி, அண்ணாமலை நகரில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் Premium Large Format DOLBY ATMOS தொழில்நுற்பதில் சிங்கிள் ஸ்க்ரீனில் இயங்கி வருகிறது.
ரம்பா தியேட்டர்
சிங்கிள் ஸ்க்ரீன் உடன் பல வருடங்களாக இயங்கி வரும் திரையரங்கங்களில் ஒன்று ரம்பா தியேட்டர். மக்களிடையே பிரபலமான திரையரங்கமாக இருக்கிறது. Dolby Atmos தொழில்நுட்பத்தில் இயங்கி வரும் இந்த திரையரங்கம் திருச்சியில் கரூர் பைபாஸ் சாலை, சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது.
காவேரி தியேட்டர்
ஹெபர் சாலை, பலகரை, சங்கிலியாண்டபுரம், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் QUBE DOLBY ATMOS, 4K CHRISTIE projection மற்றும் 3D தொழில்நுட்பத்துடன் இயங்கி வருகிறது. இந்த திரையரங்கில் மொத்தம் ஒரே ஒரு ஸ்க்ரீன் என்பது குறிப்பிடத்தக்கது.