சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட்
வேலூர் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது வெயில் தான். சம்மரில் தமிழ்நாட்டிலேயே வேலூரில் தான் வெயில் உச்சத்தை தொடும்.
இது ஒருபுறம் இருக்க வேலூரில் இருக்கும் சில முக்கிய தியேட்டர்கள் அங்கிருக்கும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவை.
அப்படி வேலூரில் இருக்கும் சிறப்பான தியேட்டர்களை பற்றி பார்க்கலாம்.
ஆஸ்கார்ஸ்
வேலூர் காட்பாடி சித்தூர் ரோட்டில் இந்த தியேட்டர் இருக்கிறது. முக்கிய நடிகர்களின் ரசிகர்கள் இந்த தியேட்டரில் தங்களது ஹீரோவின் படத்தை வெறித்தனமாக கொண்டாடுவதை பார்க்க முடியும்.
INOX
படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கி வருகிறது வேலூர் INOX Cinemas. வேலூரில் பிரபலமான VIT ரோட்டில் இந்த தியேட்டர் அமைந்து இருக்கிறது.
அலங்கார் சினிமாஸ்
4K Dolby 7.1 உடன் இருக்கும் இந்த தியேட்டர் கொசப்பேட்டை Infantry ரோட்டில் இருக்கிறது. ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி என்றால் வெறித்தனமாக கொண்டாடுவதை இந்த தியேட்டரில் பார்க்க முடியும்.
விஷ்ணு சினிமாஸ்
புது பேருந்து நிலையம் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது. இது நல்ல ambience உடன் இருக்கும் தியேட்டர் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
அப்சரா தியேட்டர்
வேலூரில் இருக்கும் மிக பழமையான தியேட்டர்களில் இதுவும் ஒன்று. இருப்பினும் பார்க்கிங் போன்ற சில வசதி குறைபாடுகள் இங்கே இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
குறள் தியேட்டர்/ சிலம்பு தியேட்டர்
நடிகர் சிம்புவின் குடும்பத்திற்கு சொந்தமான தியேட்டர் இது. வேலூர் கோட்டை பின்புறம் பெங்களூர் சாலையில் இது இடம்பெற்று இருக்கிறது.
மிகவும் பழைய தியேட்டர், வசதிகள் மிக குறைவு என சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.
You May Like This Video

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
