தமிழ் சினிமாவை மிரட்டிய சிறந்த வில்லன் நடிகர்கள் - ஒரு பார்வை
தமிழ் சினிமாவில் வெவ்வேறு காலகட்டங்களில் சிறந்த நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் மிரட்டியுள்ளனர். ஒரு திரைப்படத்தில் எந்தளவிற்கு ஹீரோ பலமாக இருக்கிறாரோ, அதே அளவு வில்லன் கதாபாத்திரமும் பலமாக காட்டியே ஆகவேண்டும். இல்லையென்றால் அது போன்ற படங்கள் அதற்காகவே வரவேற்பை பெற தவறியதை பார்த்து இருக்கிறோம்.
அப்படியான முக்கிய வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்டிய நடிகர்கள் குறித்து தான் தற்போது பார்க்கவுள்ளோம்.
M.N.நம்பியார்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நம்பியார், ஏறக்குறைய 1919 முதல் 2008 வரை கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்தார். ஆரம்பத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நம்பியார் பின் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவரின் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார்.
தனக்கென ஒரு பாணியில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய நம்பியாரை காலம் தாண்டியும் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
ரகுவரன்
ரகுவரன், தமிழ் சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர் என்பதை யாராலும் மறுத்திட முடியாது. அப்படி இவர் செய்த கதாபாத்திரங்கள் பல உண்டு. 80-களில் டாப் நடிகர்களுக்கு வில்லனாக கலக்கி வந்த ரகுவரன் செம பிஸியான நடிகராக மாறினார். பாட்ஷா, முதல்வன், ரட்சகன் உள்ளிட்ட படங்களில் இவரின் வில்லத்தனமான நடிப்பிற்கு பெரிய ரசிகர்கள் இருந்தனர். முக்கியமாக ரஜினியின் அதிகமான படங்களில் ரகுவரன் தான் வில்லனாக நிறைய திரைப்படங்களில் மிரட்டியிருப்பார்.
பிரகாஷ் ராஜ்
தற்போது இந்தியா சினிமா அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழில் இவர் நடித்த பல வில்லன் கதாபாத்திரங்கள் பெரியளவில் பேசப்படும். அப்படி சில படங்களில் ஒன்று கில்லி, இதில் பிரகாஷ் ராஜின் முத்துப்பாண்டி கதாபாத்திரத்தை யாராலும் மறந்திட முடியாது. அப்படி இவர் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரங்களை இவரை விட யாராலும் சிறப்பாக செய்திட முடியாது என்பது அசால்ட்டாக நடித்துவிடுவார் பிரகாஷ் ராஜ்.
பசுபதி
தமிழ் சினிமாவின் மற்றுமொரு சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் பசுபதி, வில்லனாக மட்டுமின்றி பசுபதி நடித்த குணசித்ர கதாபாத்திரங்கள் அதிகம். ஆனால் பசுபதி-யை ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கொண்டு சேர்ந்ததே அவரின் வில்லன் கதாபாத்திரங்கள். தூள், விருமாண்டி, அருள், சுள்ளான், திருப்பாச்சி, மதுர என சென்சேஷனல் நடிகராக மாறினார் நடிகர் பசுபதி.
ஜெகபதி பாபு
இப்போதைய ட்ரெண்டிங் வில்லன் நடிகர் என்றால் அது ஜெகபதி பாபு தான். தமிழ், தெலுங்கு என எந்த படத்தை எடுத்து பார்த்தாலும் ஜெகபதி பாபுவை தான் வில்லனாக காண்பிக்கின்றனர். பைரவா, விசுவாசம், அண்ணாத்த என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் சமீபத்திய படங்களில் இவர் தான் வில்லனாக மிரட்டியிருந்தார். இனி என்னென்ன திரைப்படங்களில் ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கிண்டலுக்கு உள்ளான விஜய் ! கடுப்பான ரசிகர்கள்..