பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் 6 நாட்கள் வசூல் விவரம் இதோ.
பெத்லகேம் குடும்ப யூனிட்
பிரேமலு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றார் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இவர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் பெத்லகேம் குடும்ப யூனிட்.

இப்படத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ளனர். பீல் குட் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அப்படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம். அந்த வகையில், கடந்த வாரம் வெளிவந்து பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 115 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.