நிதி அகர்வால், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு.. ஷாக்கிங் தகவல்

By Kathick Jul 10, 2025 09:10 AM GMT
Report

சூதாட்ட செயலி விவகாரம்

சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள் 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நிதி அகர்வால், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு.. ஷாக்கிங் தகவல் | Betting App Scam Case Against 29 Celebrities

நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், நடிகைகள் மஞ்சு லட்சுமி, ப்ரணிதா சுபாஷ், நிதி அகர்வால் உள்ளிட்ட 29 பேர் மீது ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில Media Influencer-கள் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

6 நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஷாக்கிங் தகவல்

சூதாட்ட செயலியால் பலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தடை செய்யப்பட்ட சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியவர்கள் மீது இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.

தொழிலதிபர் பஹனிந்த்ரா ஷர்மா என்பவர் மீது அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், தனது செயலியின் பயனர்களை தவறாக வழிநடத்திய குற்றத்திற்காகவும், இதனால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

நிதி அகர்வால், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு.. ஷாக்கிங் தகவல் | Betting App Scam Case Against 29 Celebrities

தெலங்கானாவின் சைபர்பாத் போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது, ED அதிகாரிகள் கவனத்தை பெற்றது. அதன்படி, இந்த செயலியை Promote செய்த குற்றத்திற்காக ஆறு நடிகர்கள் மற்றும் 19 சமூக Media Influencer-களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US