அந்த மாதிரியான காட்சியின் போது பகவத் கீதை வரிகள்!..இந்திய சென்சார் வாரியத்துக்கு குவியும் எதிர்ப்பு

Dhiviyarajan
in திரைப்படம்Report this article
பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ என்ற திரைப்படம் நேற்று (021-07-2023) வெளியானது. இப்படத்திற்கு இந்திய ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இப்படம் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஓப்பன்ஹெய்மர் படத்தில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் காட்சியில் "உலகங்களை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்" என்ற பகவத் கீதை வசனம் இடம் பெற்று இருந்தது.
இதனால் இந்திய ரசிகர்கள் சிலர், ஆபாச காட்சியின் போது பகவத் கீதை வரிகள் வைத்ததற்கு எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இது போன்ற காட்சிகளை ஏன் கட் செய்யவில்லை? என்று இந்திய சென்சார் வாரியத்துக்கு சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த கொடுமை