18 வருடங்களாக சினிமா பக்கம் வராதது ஏன்?- ஓபனாக கூறிய பாக்யராஜ் மகள் சரண்யா
பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், கதையாசிரியர், தயாரிப்பாளர் என் பன்முக திறமையை வெளிக்காட்டியவர் பாக்யராஜ்.
இவர் பிரவீனா என்பவரை 1981ம் ஆண்டு திருமணம் செய்தார், ஆனால் அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பின் 1984ம் ஆண்டு பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு சரண்யா மற்றும் சாந்தனு என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சாந்தனு சினிமாவில் நாயகனாக அறிமுகமானாலும் சரியான ஒரு படம் அவருக்கு அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.
சரண்யா
அதேபோல் பாக்யராஜின் மகள் சரண்யாவும் நாயகியாக சில படங்கள் நடித்தார், ஆனால் அவருக்கு பெரிய வெற்றி படமாக எதுவும் அமையவில்லை. இந்த நிலையில் நடிகை சரண்யா தனது சினிமா பயணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் நான் நடிக்கும் காலகட்டத்தில் அதிகம் இருந்தது. நான் நடித்த திரைப்படங்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
கதாநாயகியாக இல்லை என்றாலும் அப்பாவிற்கு உதவியாக பல திரைப்படங்களில் வேலை பார்த்திருக்கிறேன், அதனால் நடிகையாக தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது.
எனக்கு சரியான வாய்ப்புகள் வராததால் தான் என்னால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை, சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று எப்போதுமே முடிவெடுத்தது கிடையாது என கூறியுள்ளார்.