மகனுக்கே டஃப் கொடுக்கும் தந்தை.. 20 வயதை குறைத்து, மாஸ் காட்டிய நடிகர் பாக்யராஜ்
16 வயதினிலே படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து, இதன்பின் புதிய வரப்புகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாக்யராஜ்.
இதனை தொடர்ந்து சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆனார்.
தொடர்ந்து முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், வேட்டிய மடிச்சுக்கட்டு போன்ற பல திரைப்படங்களை இயக்கி நடித்தும் முன்னணி பிரபலமானார்.
நடிகரும், இயக்குனருமான கே. பாக்யராஜ் அவர்களுக்கு சாந்தனு என ஒரு மகன் இருப்பதை நாம் அறிவோம்.
சாந்தனு, தமிழில் வெளிவந்த சக்கரக்கட்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்நிலையில் கே. பாக்யராஜ் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும், 'பாக்யராஜா இது..! 20 வயது குறைந்தது போல் தோற்றமளிக்கிறாரே' என்று கமன்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..


