சிவகார்த்திகேயன் மிகவும் ஒழுக்கமான நடிகர்.. மனம் திறந்து பேசிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்
பாக்யஸ்ரீ போர்ஸ்
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்கு முன் மிஸ்டர் பச்சன், கிங்டம் ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான லெனின் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க, ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
மனம் திறந்து பேசிய நடிகை
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி ஒரு வார்த்தை கேட்க, அதற்கு யார் சரியாக பொருந்திப்போவார் என்பதை நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கூறி வந்தார். அப்போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, 'ஒழுக்கம்' என கேட்க, நடிகர் சிவகார்த்திகேயன் என பாக்யஸ்ரீ கூறினார். இது ரசிகர்களிடையே பரவலாகி வருகிறது.

கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu